• India
```

எதிர் காலத்தில்...இந்த இந்த தொழில் துறைகள் தான்...நிச்சயம் டாப்ல இருக்குமாம்...!

Fastest Growing Industries

By Ramesh

Published on:  2025-01-16 19:29:53  |    25

Fastest Growing Industries - முதலில் ஒரு நல்ல தொழில் துவங்க வேண்டும் எனில் எந்தெந்த துறைகள் எதிர்காலத்தில் வலுப்பெறும் நிலையான வருமானத்தை தரும், என்பது குறித்த சரியான தகவலை அறிந்து இருப்பது அவசியம், அந்த வகையில் எதிர் காலத்தில் எந்த எந்த துறைகள் வளர்ச்சியை நோக்கி செல்லும், இலாபகரமாக இருக்கும் என்பது குறித்த முழுமையான தகவலை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

முதலாவதாக ஹெல்த் கேர் இன்டஸ்ட்ரீஸ் தான் எதிர்காலத்தில் நிலையானதொரு உச்சத்தில் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது, மருத்துவ பராமரிப்பு, ஆரோக்கிய சேவைகள் மற்றும் நோய் தடுப்பு ஆகியவற்றை வழங்கும் வணிகங்கள், இது போக மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், முடி மற்றும் முக பராமரிப்பு சேவைகள் உள்ளிட்டவைகள் பலவும் இதில் அடங்கும்,



அதற்கு அடுத்து பார்க்கும் போது டெக்னாலஜி மிக முக்கிய இடம் வகிக்கும், அதிலும் AI தொழில் நுட்பம் அனைத்து துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும், Software as a service (SaaS), internet of things (IoT) போன்ற துறைகளில் அபரீத வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், டிஜிட்டல் உலகில் சைபர் செக்யூரிட்டி என்றதொரு தனி துறைக்கான தேவை அதீதமாக அதிகரிக்கலாம்.

அதற்கு அடுத்து பார்க்கும் போது, மறு சுழற்சி செய்யக்கூடிய ஆற்றல்கள், ஏற்கனவே உலகம் மறு சுழற்சி செய்யக்கூடிய ஆற்றலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, காற்றாலை, சோலார், ஹைட்ராலிக் ஆற்றல், எலக்ட்ரிக் பைக்குகள், எலக்ட்ரிக் கார்கள் என பல நாடுகள் மறு சுழற்சி செய்யக்கூடிய ஆற்றலை நோக்கி முன்னேறுவதால் அந்த துறையும் பெரும் வளர்ச்சியை நோக்கி செல்லும்.

" இது போக ஈ காமர்ஸ், டிஜிட்டல் மீடியா, பயோ டெக், லாஜிஸ்டிக்ஸ், போக்குவரத்து துறை என இந்த துறைகளிலும் வளர்ச்சியை எதிர்காலத்தில் காணலாம் என கூறப்படுகிறது "