Edelman Announced LayOffs - வருமான ரீதியில் உலகின் மிகப்பெரிய மார்க்கெட்டிங் நிறுவனம் ஆக அறியப்படும் Edelman வேலை நீக்கத்தை அறிவித்து இருக்கிறது.
Edelman Announced LayOffs - அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மக்கள் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்துதல் நிறுவனம் ஆன Edelman, வருமான ரீதியாக உலகின் மிகப்பெரிய மார்க்கெட்டிங் நிறுவனமாக அறியப்படுகிறது, சர்வதேச அளவில் 60 இடங்களில் கிளைகளை அமைத்து செயல்பட்டு வரும் Edelman நிறுவனத்தில், 6,500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருவதாக தகவல்.
வருடத்திற்கு கிட்ட தட்ட 1,200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என வருமானம் ஈட்டி வரும் Edelman நிறுவனத்தின் வருமானம் இந்த நிதி ஆண்டில் கொஞ்சம் சரிவை சந்தித்து வருகிறது, முக்கியமாக இந்த வருமான இழப்புகள், அமெரிக்கா மற்றும் ஆசிய ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் Edelman நிறுவனத்தில் மட்டும் சற்றே அதிகமாக இருப்பதாக தகவல்.
கனடா மற்றும் இலத்தீன் அமெரிக்க பகுதிகளில் நிறுவனங்கள் இலாபகரமாக செயல்படுகிறதாகவும் நிறுவனம் கூறி இருக்கிறது, நிறுவனத்தின் இந்த வருமான செயல்பாடுகளை உற்று நோக்கிய Edelman நிறுவனத்தின் தலைமைகள் நிறுவனத்தை சமநிலைப்படுத்த பொதுவாக அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்துகின்ற, வேலை நீக்கம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கின்றன,
அதிகமாக வருமான இழப்பு ஏற்பட்டு இருக்கும் அமெரிக்க நிறுவனங்களில் 8% ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும், ஆசிய நிறுவனங்களில் 3% ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் Edelman நிறுவனம் முடிவெடுத்து இருக்கிறது, பொதுவாக Edelman நிறுவனம் இவ்வாறாக கடுமையான முடிவுகளை எடுப்பதில்லை, சூழல் அவ்வாறாக இருப்பதால் இந்த முடிவுக்கு ஊழியர்கள் ஒத்துழைக்குமாறு, நிறுவனம் கேட்டுக் கொண்டு இருக்கிறது.