• India
```

அமெரிக்காவிற்கு அனுப்பிய..3 இலட்சம் மாத்திரைகளை திரும்ப பெறும் டாக்டர் ரெட்டி ஆய்வகம்..என்ன நிகழ்ந்தது..?

Dr Reddys Lab recalls Over 3 Lakh Bottles Of Cinacalcet

By Ramesh

Published on:  2024-11-04 01:54:00  |    191

Dr Reddy’s Lab recalls Over 3 Lakh Bottles Of Cinacalcet - மிகப்பெரிய ஆய்வகமாக உலகளாவிய அளவில் அறியப்படும் டாக்டர் ரெட்டி ஆய்வகம், அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 இலட்சம் மாத்திரைகளை திரும்ப பெற்று இருக்கிறது, அதற்கு என்ன காரணம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Dr Reddys Lab recalls Over 3 Lakh Bottles Of Cinacalcet - கிட்டதட்ட 40 வருடங்களாக மருந்து தயாரிப்பு துறையில் செயல்பட்டு வரும் டாக்டர் ரெட்டி ஆய்வகம் உலகளாவிய அளவில் தங்களது மருந்து தயாரிப்புகளை சப்ளை செய்து வருகிறது. ஹைதராபாத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் டாக்டர் ரெட்டி ஆய்வகம் நிகழ் வருடத்தில் மட்டும் கிட்ட தட்ட மருந்து விற்பனையில் 28,905 கோடி வருமானம் ஈட்டி இருக்கிறது,

கிட்டதட்ட 200 க்கும் மேற்பட்ட மருந்துகள், லேப் கிட்கள், கிரிட்டிகல் கேர் மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டாக்டர் ரெட்டி ஆய்வக மருந்துகளுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமே இறக்குமதிக்கு அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது, டாக்டர் ரெட்டி ஆய்வகத்தின் அமெரிக்க சப்ளையில் வரும் வருடாந்திர வருமானம் மட்டும் 120 பில்லியன் டாலர்களை தாண்டும் என கூறப்படுகிறது,



இந்த நிலையில் தான் டாக்டர் ரெட்டி ஆய்வகம் இந்தியாவில் இருந்து தயாரித்து அமெரிக்காவிற்கு அனுப்பி இருக்கும் மாத்திரைகளின் ஒரு புதிய பிரச்சினை எழுந்து இருக்கிறது, அதாவது இரத்தத்தில் அதிகமாக இருக்கும் கால்சியத்தை குறைக்கும் மாத்திரைகள் மற்றும் தைராய்டிசத்தை குறைக்கும் மாத்திரைகள் என கிட்ட தட்ட மூன்று இலட்சம் மாத்திரைகளை ரெட்டி ஆய்வகம் திரும்ப பெறுவதற்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது, 

அதற்கான காரணம் என்ன கேட்ட போது மாத்திரைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் என்-நைட்ரோசோ சினகால்செட் கெமிக்கலின் தூய்மை தன்மையில் குறைவு இருப்பதாக கூறப்படுகிறது, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் இது போன்ற தவறுகள் நிகழ்ந்தால் ஆய்வகங்களே மூடப்படும் அபாயம் ஏற்படும், டாக்டர் ரெட்டி ஆய்வகங்களின் மற்றும் சில மருந்துகளையும் ஆய்வு செய்ய அமெரிக்கா விளைகிறதாம்.



இதனால் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களின் தயாரிப்புகளின் அமெரிக்கா சப்ளைக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது, பொதுவாக அமெரிக்காவில் பிற நாடுகளில் இருந்து வரும் மருந்துகள் நன்கு ஆய்வு செய்த பிறகே நாட்டிற்குள் அனுமதிக்கப்படும், அவ்வாறு அனுமதிக்கப்பட்ட இந்திய ஆய்வகங்களால் இப்படி ஒரு பிரச்சினை நிகழ்ந்திருப்பது சர்ச்சைக்குரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

" இதனால் டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் பிற நாடுகளுக்கு அனுப்பும் மருந்துகளும் தடைபடும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது, உலகின் மூன்றாவது மிகப்பெரிய மருந்து சப்ளையராக அறியப்படும் டாக்டர் ரெட்டி ஆய்வகத்திற்கு இந்த மருந்து பிரச்சினை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது "