Deloitte LayOff's - சர்வதேச கணக்கு தணிக்கை நிறுவனமாக அறியப்படும் டெலாய்ட் நிறுவனம், தனது இங்கிலாந்து மையத்தில் பணி நீக்கத்தை அறிவித்து இருக்கிறது.
Deloitte LayOff's - உலகளாவிய அளவில் நான்காவது மிகப்பெரிய கணக்கு தணிக்கை நிறுவனமாக அறியப்படுகிறது டெலாய்ட், இலண்டனை மையமாக கொண்டு இயங்கும் டெலாய்ட் நிறுவனம், 4,57,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் 150 நாடுகளில் இயங்கி வருகிறது, 1845 முதல் இயங்கி வரும் டெலாய்ட், வாடிக்கையாளர்களுக்கு வரி கணக்கிடுதல், தணிக்கை,நிறுவன ஆலோசனை உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
கடந்த நிதி ஆண்டில் டெலாய்ட் நிறுவனத்தின் வருமானம் 64.9 பில்லியன் டாலராக இருந்தது, இந்த நிதி ஆண்டில் டெலாய்ட் நிறுவனத்தின் வருமானம் 5% வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெலாய்ட்டின் நிதி ஆலோசனை பிரிவின் வருமானம் 1% வீழ்ச்சியைக் கண்டது, அதே சமயம் நிதி மற்றும் வரிகள் ஆலோசனை சேவைகளின் வருமானம் 2% வீழ்ச்சியைக் கண்டு இருக்கிறது.
சந்தைகளில் அவ்வப்போது நிலவும் கடினமான சூழ்நிலைகளில் சர்வதேச நிறுவனங்கள் கையில் எடுக்கும் முதல் ஆயுதமாக தற்போது வேலை நீக்கம் இருக்கிறது, டெலாய்ட் நிறுவனமும் அதே ஆயுதத்தை தான் கையில் எடுத்து இருக்கிறது, கடந்த பிப்ரவரியில் தான் 100 பேரை பணி நீக்கம் செய்து இருக்கும் நிலையில், தற்போது நிறுவனத்தில் இருந்து 180 பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
அந்த 180 பேரும் UK வில் இயங்கி வரும் டெலாய்ட் நிறுவனத்தின் நிதி ஆலோசனை பிரிவில் பணி புரிபவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது, இதனால் UK நிறுவனத்தில் பெரும் குளறுபடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக டெலாய்ட் நிறுவனத்தின் UK தலைமைகள் கூறி இருக்கின்றன, ஆனாலும் கூட டெலாய்ட் அதை எல்லாம் கண்டு கொள்வதாக இல்லை.