• India
```

கோக் நிறுவனம் பெருசா...இல்ல பெப்சி நிறுவனம் பெருசா...ஒப்பிட்டு பார்த்திடலாம் வாங்க...!

 Coke VS Pepsi

By Ramesh

Published on:  2025-02-15 14:54:47  |    76

Coke VS Pepsi Market Value - சர்வதேச குளிர்பான நிறுவனங்களான கோக் பெருசா அல்லது பெப்சி பெருசா என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

கோக் மற்றும் பெப்சி இரண்டுமே அமெரிக்காவை மையமாக கொண்டு உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் தான், கோக் கோலா 1886 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, பெப்சி 1893 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, ஆனால் இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான வலிமையான மார்க்கெட் போட்டி என்பது 1970 கள் மற்றும் 1980 களில் தான் ஆரம்பித்தது.

உலகளாவிய அளவில் தங்களது மார்க்கெட்டுகளை இரண்டு நிறுவனங்களுமே ஒரே நேரத்தில் விரிவு படுத்தியதன் விளைவு தான், இரண்டுக்கும் இடையிலான கடுமையான போட்டி துவங்கியதற்கு காரணம் ஆக கூறப்படுகிறது, இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை பிடிக்க விளம்பரங்கள், பரிசுகள், விலை குறைப்பு, இலவச ப்ரிட்ஜ் என பல யுக்திகளை கையாண்டனர், 



கோக் பிடித்த மார்க்கெட்டை பெப்சியால் பிடிக்க முடியாது, பெப்சி இருக்கும் மார்க்கெட்டை கோக்கால் ஆட்கொள்ள முடியாது என இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் ஒரு தொழில் போட்டி இன்றளவும் இருந்து கொண்டு தான் இருக்கிறது, ஆனால் நிறுவன ரீதியாக கோக் பெரிதா பெப்சி பெரிதா என கேட்டால் பெப்சி தான் பெரியது என சொல்லி விடலாம்.

காரணம் பெப்சி குளிர்பான பொருள்களை மட்டும் சந்தைப்படுத்தாமல், ஒர் சில சிப்ஸ்கள், உணவு வகைகள், தின் பண்டங்கள் என பலவற்றை சந்தைப்படுத்துவதால், பெப்சியின் கை சற்றே கோக்கை விட ஓங்கி இருக்கிறது, வருமானத்தை பொறுத்தமட்டில் பெப்சி கடந்த 2024 யில் 93 பில்லியன் டாலர் வருமானம் பார்த்த நிலையில், கோக் வெறும் 45.8 பில்லியன் டால்ர் வருமானம் மட்டுமே பார்த்து இருப்பதாக தகவல்.

" அந்த வகையில் அளவிலும் சரி வருமானத்திலும் சரி கோக் நிறுவனத்த விட பெப்சியே விஞ்சி நிற்கிறது என கூறி விடலாம் "