Bosch Plans To Lay Off 7000 Employees - எதிர்பார்த்த இலாபத்தை பெற முடியாத காரணத்தால் Bosch நிறுவனம் 7000 ஊழியர்களை பணியை விட்டு நீக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
Bosch Plans To Lay Off 7000 Employees - ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கி வரும் Bosch நிறுவனம் உலகளாவிய அளவில் பல கிளைகளை வைத்து இருக்கிறது, கிட்டதட்ட 137 வருடங்களாக இயங்கி வரும் Bosch நிறுவனம் கடந்த வருடத்தில் மட்டும் உலகளாவிய அளவில் 91.59 பில்லியன் யூரோக்களை வருமானமாக ஈட்டி இருக்கிறது, இந்திய மதிப்பில் Bosch நிறுவனத்தின் வருடாந்திர வருமானம் 8 இலட்சம் கோடிகளை தாண்டும் என கூறப்படுகிறது,
ஆனாலும் கூட இந்த வருமானம் என்பது Bosch நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லையாம், கொரோனோ காலத்தில் நிறைய இழப்புகளை பெற்று விட்டதால், அதில் இருந்து இன்னமுமே பல பெரிய நிறுவனங்கள் மீள முடியவில்லை, அதனுள் ஒரு நிறுவனமாக Bosch நிறுவனமும் அறியப்படுகிறது, கிட்டதட்ட 5 சதவிகிதத்திற்கும் மேலாக நிறுவனத்தின் அசலிலேயே பெரிய துண்டு விழுந்து இருக்கிறது,
இந்த இலாப குறைப்பை எதிர்கொள்ளவும், எதிர்கால இலக்குகளை அடைவதற்கும் Bosch நிறுவனம் ஊழியர்களை குறைக்க முடிவெடுத்து இருக்கிறது, தற்போது முதற்கட்டமாக 7,000 ஊழியர்களை பணிகளை விட்டு நீக்க முடிவெடுத்து இருக்கிறதாம், இந்த பணி நீக்கம் Bosch நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஜெர்மனியிலும் இருக்கும் என கூறப்படுகிறது.
அதிகபட்சமான ஊழியர்கள் நீக்கம் ஆட்டோமொபைல் பார்ட்ஸ்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும், Bosch மெசினரி டூல்ஸ்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் இருக்கும் என கூறப்படுகிறது, இந்த ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை அடுத்த மூன்று வருடத்திற்கு அதாவது 2027 வரை தொடரும் என நிறுவனம் அறிவித்து இருக்கிறது, இதனால் Bosch ஊழியர்கள் தற்போது பீதியில் இருக்கின்றனர்.