Bosch LayOffs - ஜெர்மனியின் ஜெர்லிஞ்சன் நகரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் Bosch நிறுவனம் உலகளாவிய அளவில் மிகப்பெரிய இயந்திரவியல் நிறுவனமாக அறியப்படுகிறது, கிட்டதட்ட சர்வதேச அளவில் 4,29,416 ஊழியர்களை கொண்டு இயங்கி வரும் Bosch நிறுவனம், வாகன உதிரி பாகங்கள், மின் உபகரணங்கள், வீட்டு உபயோக பொருள்கள், இயந்திரவியல் சாதனங்கள் உள்ளிட்டவைகளின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 92 பில்லியன் யூரோக்களை வருமானம் ஈட்டி இருக்கும் Bosch நிறுவனம் நிறுவனத்தின் வருமான சமநிலைக்காகவும், எதிர்கால நோக்கங்களுக்காகவும் நிறுவனத்தில் ஒரு சில மாற்றங்களை செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது, அதாவது சர்வதேச அளவில் கிட்டதட்ட 8,000 முதல் 10,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது தான் அந்த மாற்றம் என தெரிகிறது.
ஏன் இந்த வேலை நீக்கம் என நிறுவனத் தலைமைகளிடம் விசாரித்த போது, பொதுவாக Bosch நிறுவனம் ஜெர்மனிகளை மையமாக கொண்டு இயங்கி வரும் கார் தயாரிப்பு நிறுவனங்களையும், ஒரு சில சர்வதேச கார் தயாரிப்பு நிறுவனங்களையும் சார்ந்து தான் இயங்கி வருகிறது, அந்த கார்களுக்கு தேவையான ஒரு சில மெக்கானிக்கல் பார்ட்களை Bosch தயாரித்து சந்தைப்படுத்தி வந்தது.
ஆனால் தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் எலக்ட்ரிக் வாகங்களின் ஆட்கொள்வால் பெரும்பாலான ஜெர்மன் கார் கம்பெனிகள் முடங்கி கிடக்கின்றன, எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பு அதிகரித்து வருவதால் இயந்திரவியலுக்கு அங்கு வேலை இல்லாமல் போயிற்று, இந்த காரணங்களும், Bosch நிறுவனத்தின் வருமான இழப்பும் தான் இந்த வேலை நீக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.