• India
```

அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனத்தின் நிகர வருமானம் 31% உயர்வு...ஆனால் இலாபம் 10% சரிவு...!

AstraZeneca Q2 Net Profit

By Ramesh

Published on:  2024-11-14 06:42:30  |    163

AstraZeneca Q2 Net Profit - பிரபல அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனத்தின் நிகர வருமானம் 31 சதவிகிதம் உயர்ந்து இருக்கிறது, அதே சமயத்தில் நிறுவனத்தின் இலாபம் 10 சதவிகிதம் அளவிற்கு சரிந்து இருக்கிறது.

AstraZeneca Q2 Net Profit - அஸ்ட்ராஜெனகா என்பது ஒரு பிரிட்டிஷ் ஸ்வீடிஸ் கூட்டு பாராமெச்சுட்டிகல்ஸ் நிறுவனம், 25 ஆண்டுகளாக மருந்து தயாரிப்புகளிலும், மருந்து ஆராச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது, புற்று நோய் பிரிவுகள் மற்றும் ஒரு சில அரிய வகை நோய்களுக்கு அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மருந்துகள் தயாரித்து வருகிறது, கொரோனா காலங்களில் ஆக்ஸ்போர்டுடன் இணைந்து தடுப்பூசி தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வந்தது. 

இந்தியாவில் செயல்பட்டு வரும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம், கடந்த அக்டோபரில் 2024 யில் சுவாச சின்சிடியல் வைரஸ் மூலம் (RSV) குழந்தைகளுக்கு வரும் சீரியஸ் ஆன சுவாசக் கோளாறுகளுக்கு, சினாஜிஸ் என்ற பிராண்ட் பெயரால் அழைக்கப்படும் பாலிவிஸுமாப் என்ற மருந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது, இந்திய மருந்துகட்டுப்பாடு நிறுவனமும் மருந்துக்கு அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.



சில வகை புற்று நோய்களுக்கு பயன்படும் வகையில் ட்ரெமெலிமமாப் (இம்ஜூடோ) என்ற மருந்தையும் சமீபத்தில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது, இந்த மருந்து நுரையீரல் புற்று நோய் மற்றும் நிணநீர் கணுக்களில் உள்ள புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது, கீமோதெரபியுடன் இணைந்து பயன்படுத்தும் போது இந்த மருந்து நல்ல ரிசல்ட் கொடுப்பதாக தகவல். 

இவ்வாறாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் அஸ்ட்ராஜெனகா கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த நிகழ் Q2 வில் அதன் வருமானம் 31 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாக தகவல், ஆயினும் கூட நிறுவனத்தின் இலாபம் கடந்த ஆண்டை விட இந்த நிகழ் Q2 வில் 10% அளவிற்கு சரிந்து இருக்கிறதாம், அடுத்த ஆண்டில் நிறுவனம் சமநிலையான இலாபத்தை அடையும் என நிறுவனத்தின் நிறுவனர் சஞ்சீவ் பஞ்சல் கூறி இருக்கிறார்.