Amazon Latest News -வாரத்திற்கு 5 நாள் நிச்சயம் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும், அமேசான் நிறுவனம் ஊழியர்களுக்கு கறார் கட்டளை!
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்ட்ரியு ஜாஸ்சி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கறார் கட்டளை ஒன்றை விடுத்து இருக்கிறார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது, ‘நாம் பல துறைகளில் தொடர்ந்து சாதித்து வருகிறோம், நம் ஒட்டு மொத்த சாதனைகளுக்கும் நம் ஊழியர்களின் பங்கு என்பது அளப்பரியாதது, அவர்களை மதிக்கிறோம், ஆனாலும் கொரோனோ காலங்களில் வீட்டில் இருந்து பணி புரிந்த பலரும் இன்னமும் அலுவலகத்திற்கு திரும்பாததும், வாரத்திற்கு இரண்டு நாள் மட்டும் என ஒரு சிலர் அலுவலகத்திற்கு வந்து செல்வதுமாக இருப்பது நம் ஊழியர்களிடையேயான ஒருங்கிணைந்து வேலை செய்யும் தன்மையை பாதிக்கிறது.
அதனை கருத்தில் கொண்டு இனி ஊழியர்கள் வாரத்திற்கு 5 நாள் கண்டிப்பாக அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும், நம் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த முடிவு ஊன்றுகோலாக அமையும் என நம்புகிறேன்’ என கூறி இருக்கிறார்.