• India
```

பிரபல பெயிண்ட் நிறுவனம்..அக்சோ நோபல் இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா..?

AkzoNobel Likely To Exit From India

By Ramesh

Published on:  2024-10-30 08:38:56  |    159

AkzoNobel Likely To Exit From India - ஐரோப்பாவின் மிகப்பெரிய வண்ணப்பூச்சு நிறுவனமாக அறியப்படும் அக்சோ நோபல் இந்தியாவை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

AkzoNobel Likely To Exit From India - ஐரோப்பாவின் ஆகச்சிறந்த வண்ணப்பூச்சு நிறுவனமாக அறியப்படும் அக்சோ நோபல் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறவோ அல்லது இந்தியாவின் ஏதாவது ஒரு நிறுவனத்துடன் கூட்டு நிறுவனமாகவோ மாற முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது, இந்தியாவில் வண்ணப்பூச்சு செயல்பாடுகளில் 5 சதவிகிதம் பங்குகளை வைத்து இருக்கும் அக்சோ நோபல், சமீபகாலமாக மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா என பல நாடுகளில் தங்கள் செயல்பாடுகளை அக்சோ நோபல் நிறுவனம் விரிவாக்கி வைத்து இருந்தாலும் கூட, இந்தியாவில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக இந்தியாவில் அந்த நிறுவனத்தால் பெரிதாக இலாபம் பார்க்க முடியவில்லை, டாட்டா, ஆதித்யா பிர்லா, ஏசியன், நிப்பான் போன்ற  வண்ணப்பூச்சு நிறுவனங்களே இந்தியாவில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் வண்ணப்பூச்சு நிறுவனங்களாக இருக்கின்றன.



ஏசியன், நிப்பான், பிர்லாவின் ஓபஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் மார்க்கெட்டுகளை இந்தியாவில் வலுப்படுத்தி வைத்திருப்பதால் அக்சோ நோபல் நிறுவனத்தால் பெரிதாக இந்திய மார்க்கெட்டுகளில் சோபிக்க முடியவில்லை, இதன் காரணமாக தான் அக்சோ நோபல் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறவோ அல்லது ஏதாவது நிறுவனத்துடன் இணைந்து கூட்டு நிறுவனமாகவோ மாற முடிவெடுத்து இருக்கிறதாம்.

அக்சோ நோபல் இந்தியாவை விட்டு வெளியேறும் பட்சத்தில், இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஆக்சனில் விட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது, அதானி, ஏசியன், பிர்லா உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போதே ஆக்சனுக்கு ரெடி ஆகி விட்டதாக கூறப்படுகிறது, ஒரு வேளை கூட்டு நிறுவனமாக மாறினாலும் கூட அக்சோ நோபல் பெரிதாக இலாபத்தை பார்க்க முடியாது என்று தான் கூறுகிறார்கள் நிபுணர்கள்.