Air Bus Announced LayOffs - பிரபல ஐரோப்பிய விமான உற்பத்தி மையமாக அறியப்படும் ஏர்பஸ் நிறுவனம், தங்களது நிறுவனத்தில் வேலை நீக்கத்தை அறிவித்து இருக்கிறது.
Air Bus Announced LayOffs - நெதர்லாந்தை மையமாக கொண்டு உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் ஏர்பஸ் நிறுவனம், 53 வருடங்களாக விமான உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது, கிட்ட தட்ட 1,48,000 பணியாளர்களை கொண்டு இயங்கி வரும் ஏர்பஸ் நிறுவனம், கமெர்சியல் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், விண்வெளி விமானங்கள், மிலிட்டரி வகை விமானங்கள் உள்ளிட்டவைகளை தயாரித்து வருகிறது.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் ஏர்பஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 65.45 பில்லியன் யூரோக்கள் வருமானம் ஈட்டி இருந்தது, நிறுவனத்தின் இலாபம் என்று கணக்கிட்டால் அதில் ஒரு 4.60 பில்லியன் யூரோக்கள் இருக்கும், ஆனால் இந்த நிதி ஆண்டில் ஏர்பஸ் நிறுவனத்தின் நிகர வருமானம் என்பது கிட்டத்தட்ட வெகுவாக சரிந்து இருக்கிறது, இலாபமும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என கூறப்படுகிறது.
தேவை குறைந்து, தயாரிப்பு பெருகி இருப்பது நிறுவனத்தின் இந்த வருமானச்சமநிலை உடைவிற்கு காரணமாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டிற்குள் இந்த வருமான இழப்பை சரி செய்ய ஏர்பஸ் தலைமைகள் கூடி கடைசியில் வேலை நீக்கம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கின்றன, கிட்டதட்ட ஒட்டு மொத்த ஏர்பஸ் ஊழியர்களுள் ஒரு 5% பேர் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்.
இந்த விகிதம் என்பது கிட்டதட்ட 2000 ஊழியர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது, இந்த பணிநீக்கங்கள் ஜெர்மனியில் இருந்து 689 பேரையும், இங்கிலாந்தில் இருந்து 477 பேரையும், பிரான்சில் இருந்து 540 பேரையும், ஸ்பெயினில் இருந்து 303 பேரையும் பாதிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நீக்கங்கள் முக்கியமாக பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறையை மையமாக கொண்டு இருக்கும் என தெரிகிறது.