4 Days Work Week In UK - ஐக்கிய இராச்சியத்தின் 200 நிறுவனங்களில் நான்கு நாள் அலுவலக வேலை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பது இணையங்களில் பேசுபொருளாகி வருகிறது.
4 Days Work Week In UK - 5 நாள் அலுவலக வேலை, 6 நாள் அலுவலக வேலை, வாரத்திற்கு 90 மணி நேர வேலை, ஞாயிறும் வேலை செய்தால் என்ன, என இந்த தலைமைச் செயல் அதிகாரிகள் வேலை நேரத்தை அதிகரித்துக் கொண்டே செல்லும் போது, அங்கு UK வில் 200 நிறுவனங்கள் தங்களது வார வேலை நாட்களை நான்கு நாட்களாக நிரந்தரமாக குறைத்து இருக்கின்றன.
சரி இது எப்படி UK வில் சாத்தியமானது என்றால் கடந்த 2022 முதலே UK இந்த 4 நாள் வார வேலை என்பதை ஆராய்வுக்கு உட்படுத்தி வருகிறது, சுமார் 70 நிறுவனங்கள் இந்த ஆராய்வுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு, கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்டு, போஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களால் தொடர்ந்து ஆராய்வுக்கு உட்படுத்தப்படும் நிறுவனங்கள் மேற்பார்வை இடப்பட்டது,
இந்த ஆராய்வின் முடிவில் 88 சதவிகித நிறுவனங்கள், ஊழியர்களின் செயல்பாடுகளும், நிறுவனத்தின் ஒட்டு மொத்த அவுட்புட்டும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர், 95 சதவிகித நிறுவனங்கள் தயாரிப்புகளில் மிகப்பெரிய மாற்றம் இருப்பதாக கருத்து தெரிவித்தனராம், அதற்கு பின்பாகவே இந்த 4 நாள் வார வேலை என்பது UK வில் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இதுவரை 24 டெக் நிறுவனங்கள், 30 க்கும் மேற்பட்ட மார்க்கெட்டிங் நிறுவனங்கள், 29 அறக்கட்டளை மற்றும் NGO, 22 இதர தொழில்கள் என UK வில் 200 நிறுவனங்களில் இந்த செயல்பாடு நடைமுறைக்கு வந்து இருப்பதாக தெரிகிறது, இந்தியாவிலும் தற்போது இந்த 4 நாள் அலுவலக வேலை என்பது பேசுபொருளாகி வருகிறது, ஆனால் இந்திய CEO க்கள் இதை அனுமதிப்பது எல்லாம் நடக்காத காரியம் தான் என்கின்றனர் ஊழியர்கள்.