• India
```

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும்...மகா கும்பமேளாவில் டீ விற்று...இரண்டு இலட்சம் வரை வருமானம் பார்த்த இளைஞர்...!

Subham Prajapat Tea Seller At Mahakumbh

By Ramesh

Published on:  2025-02-20 09:18:38  |    157

Tea Seller Earning 7000 Per Day In Mahakumbh - பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் டீ விற்று ஒரு இளைஞர் தினசரி 7,000 ரூபாய் வரை வருமானம் பார்த்து வருகிறாராம்.

மகா கும்பமேளா என்பது அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன், நாசிம் உள்ளிட்ட நான்கு நகரங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி நடைபெறும், அந்த வகையில் தற்போதைய மகா கும்பமேளா என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமம் ஆகும் இடமான உத்திரபிரதேசம் மாநிலம் அலகாபாத் (பிரயாக்ராஜ்) நகரில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த மகா கும்பமேளாவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தினசரி இலட்சக்கணக்கில் குவிந்து வருகின்றனர், ஒரே நாளில் இலட்சக்கணக்கில் பக்தர்கல் கூடுவதால் அவர்களுக்கான அத்தியாவசிய தேவை என்பது வெகுவாய உயர்ந்து இருக்கிறது, இதனால் அருகில் இருக்கும் மாநிலத்தவர்கள் இந்த மகா கும்பமேளாவை பயன்படுத்திக் கொண்டு சிறு சிறு கடைகளை அங்கு நடத்தி வருகின்றனர்.



அந்த வகையில் சுபம் பிரஜாபாத் என்ற இளைஞர் முதலில் கும்பமேளாவில் ஒரு டீ கடை வைத்து பார்த்தார், அதிகாலையில் கூட்டம் கூடினாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் வியாபாரம் டல் அடித்து இருக்கிறது, என்ன செய்யலாம் என்று யோசித்த சுபம், டீ கார்ட்டை கையில் தூக்கி கொண்டு அப்படியே சுற்றி சுற்றி வலம் வந்து டீ விற்க துவங்கினார்.

இது அவருக்கு கடையாக வைத்ததை விட அதிக விற்பனையை பெற்று தந்தது, நிறைய வாடிக்கையாளர்களிடமும் அவரது டீயை கொண்டு போய் சேர்க்க முடிந்தது, அந்த வகையில் ஒரு நாள் ஒன்றுக்கு டீ விற்பனையின் ரூ 7000 வரை அவரால் வருமானம் பார்க்க முடிந்ததாம், தற்போது அவர் ஈட்டி இருக்கும் வருமானம் மட்டும் இரண்டு இலட்சங்களை தாண்டும் என கூறப்படுகிறது.