US Funds In Indian Election - அதிபர் பைடன் தலைமையில் அமெரிக்காவின் கஜானாக்களில் இருந்த பணம், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளுக்கு சென்றதாக ட்ரம்ப் கூறி வருகிறார், அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக ஒரு நாடு இன்னொரு நாடுகளிடம் இருந்து நிறுவன ரீதியாக, பொருளாதார ரீதியாக முதலீடு பெறுவது என்பது சாதாரண விடயம் தான், இன்னொரு நாட்டு வங்கிகளும் கூட அண்டை நாடுகளுக்கு, நட்பு நாடுகளுக்கு நட்பு ரீதியாக கடன் உதவிகளும் செய்வது உண்டு, ஆனால் அரசியல் ரீதியாக, சமூக பிரச்சினைகளுக்காக என்று எந்த நாடுகளும் நிதி உதவி வழங்குவதில்லை.
அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக, பல்லுயிர் பெருக்கங்களுக்கு என்று பல மில்லியன் டாலர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாள நாடுகளுக்கு பைடன் தலைமையிலான அரசு வழங்கி இருக்கிறது, இந்த நிதிகள் என்ன காரணத்துக்காக வழங்கப்பட்டது, இது எப்படி செலவழிக்கப்பட்டது என கூற முடியுமா என ட்ரம்ப் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பைடன் தலைமையிலான அரசு, இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றங்களுக்கோ, இல்லை சாதமான சூழல் உருவாவதற்கு ஒரு குறிபிட்ட தலைவரை தேர்ந்து எடுக்கவோ இந்த நிதிகளின் மூலம் உதவி புரிந்ததா எனவும் ட்ரம்ப் கேள்வி எழுப்பி இருக்கிறார், இந்தியாவில் நடக்கும் வாக்கெடுப்பிற்காக அமெரிக்கா ஏன் 21 மில்லியன் டாலரை அனுப்ப வேண்டும்
இந்திய வாக்குப்பதிவு குறித்து ஏன் அமெரிக்கா கவலைப்பட வேண்டும் எனவும் ட்ரம்ப் கடுமையாக சாடி இருக்கிறார், உண்மையில் தேர்தலுக்காக இந்திய அரசிய6லில் ஈடுபடும் ஆளுமைகள் அமெரிக்காவிடம் இருந்து நிதி உதவி பெற்றதா, ஏன் அமெரிக்கா முன்வந்து இந்திய தேர்தலுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என பல கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.