இன்றைய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் இரு முக்கியமான முன்னணி நிறுவனங்களாக விளங்குகின்றன. குறிப்பாக, பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறந்த விற்பனை சாதனை நிகழ்த்தி வருகிறது.
ஹீரோ நிறுவனம் தற்போது விடா பிராண்டின் கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்து வரும் நிலையிலும், பஜாஜ் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது விற்பனை குறைவாகவே உள்ளது.
ஆனால், அடுத்த 2-3 ஆண்டுகளில் ஹீரோ நிறுவனம் பெரும் மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், லெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது.
இதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன – இதன்மூலம் ஹீரோ, எலெக்ட்ரிக் வாகன சந்தையில் புதிய மைல்கல்லை எட்டத் திட்டமிட்டுள்ளது.