• India
```

இந்தியாலாம் டெக்னாலஜில...என்னிக்குமே சீனா அமெரிக்காவை நெருங்க முடியாது...ஜீரோதா திலீப்குமார் காட்டமான பதிவு...!

Mumbai AI Event Controversy

By Ramesh

Published on:  2025-02-04 23:24:28  |    11

AI Event Controversy - ஜீரோதா நிறுவனத்தின் திலீப்குமார் இந்தியா என்றுமே டெக் விடயத்தில் சீனா மற்றும் அமெரிக்காவை நெருங்க முடியாது என காட்டமாக கூறி இருக்கிறார், அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு செயற்றை நுண்ணறிவு குறித்த நிகழ்ச்சியில் டெக் நிறுவனர்களை விட அதிகமாக பாலிவுட் பிரபலங்களும், கிரிக்கெட்டர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர், அவர்கள் தான் பெரும்பாலும் அந்த நிகழ்வை ஆக்கிரமித்தது போல இருந்தது, பெரும்பாலானா டெக்கிகள் இதற்கு கடும் கண்டனத்தை இணையத்தில் பதிவு செய்து வந்தனர்.

இது குறித்து ஜீரோதா நிறுவனத்தின் திலீப் குமார் கூறுகையில், 'இந்தியா எப்போதுமே டெக்னாலஜியில் சீனா மற்றும் அமெரிக்காவை நெருங்க முடியாது என்பதை இதை வைத்தே சொல்லலாம், அவர்கள் வாழ்வில் ஒரு வரி கூட கோடிங் எழுதிடாத பாலிவுட் பிரபலங்களும், கிரிக்கெட்டர்களும் எதற்கு செயற்கை நுண்ணறிவு நிகழ்வில் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்' என காட்டமாக ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.



உண்மையில் சாதாரண ஒரு காமன் மேனுக்கு அது தான் தோன்றும், இந்தியா தற்போது பல டெக்னாலஜிகளில்  அண்டை நாடுகளை விட பின் தங்கி தான் இருக்கிறது, சீனா Deepseek என ஒரு AI வடிவமைத்து அமெரிக்காவையே வியக்க வைத்து இருக்கிறது, எலான் மஸ்க் கூட சீனாவின் AI கண்டு பொறாமை படும் அளவிற்கு சீனாவின் டெக் விடயங்கள் இருக்கிறது.

சரி, இந்தியாவில் அப்படி என்றால் டெக்கிகளே இல்லையா என்றால், அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் ஆன கூகுளில் பணிபுரியும் 40% டெக்கிகள் இந்தியர்கள் தான், டெஸ்லா, மெட்டா என பல முக்கிய நிறுவனங்களிலும் இந்திய் டெக்கிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், அவர்கள் வெறும் வேலையாட்களாக இல்லாமல் நிறுவனர்களாக இந்தியாவில் இருந்திருந்தால் இந்தியாவும் டெக்கில் ஆதிக்கம் செலுத்தி இருக்கும்.