• India

ஒரு மனிதன் தன் அறிவால் வகிக்கும் இடத்தை...ஒரு செயற்கை நுண்ணறிவால்...ஆட்கொள்ள முடியுமா...?

Human VS AI Who Will Win This Race

By Ramesh

Published on:  2025-01-11 09:28:06  |    31

Human VS AI: Who Will Win This Race - செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு செயல்பாட்டு கட்டமைப்பு, மனிதன் செய்யும் ஒரு வேலையை அது ஆட்டோமேட்டடு ஆக்கும், இது இப்போது தான் வந்ததா என்றால் இல்லை, சுமார் 50 ஆண்டுகளாகவே செயற்கை நுண்ணறிவு குறித்த ஆராய்ச்சிகளை மனிதன் செய்து கொண்டு தான் இருக்கிறான், AI உலகில் அப்போதில் இருந்தே இருந்து கொண்டு தான் இருக்கிறது,

ஆனால் தற்போது நடைமுறையில் இருக்கும் அட்வான்ஸ்டு AI தொழில் நுட்பங்கள் தான் தற்போதைய நிகழ் யுகத்தை வியக்க வைக்கிறது, பொதுவாக அனைத்தும் தெரிந்த மனிதன் இந்த உலகில் இல்லவே இல்லை, ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது தெரிந்திருக்கும், அந்த மனிதர்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு ஆற்றல் உருவாக்கப்படுகிறது, அது தான் செயற்கை நுண்ணறிவு.



பல மனிதனின் மூளை சேர்ந்து உருவாக்கும் AI, அவர்களின் அனைத்து அறிவையும் ஒருங்கிணைத்து பெறுவதால், பல அசாத்தியங்களை நிகழ்த்த முடிகிறது, ஆனால் இங்கும் மனிதனின் மூளையில் இருக்கும் அறிவு தான் AI க்குள் புகுத்தப்படுகிறது, இன்று தொழில்நுட்ப நிறுவனங்கள் AI யை வடிவமைத்து பல ஊழியர்களை வேலை நீக்கம் செய்யலாம்.

ஆனால் நாளடைவில் அட்வான்ஸ்டு ஆகிக் கொண்டே போகும் AI தொழில் நுட்பத்தால், அவர்கள் AI யை வடிவமைப்பதற்கும் பரமாரிப்பதற்குமே பல ஊழியர்களை நியமிக்க வேண்டிய சூழல் வரும், ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு தயாரிப்பு நிறுவனங்களில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது, எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஊழியர்களை விட, தயாரிப்பு நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் தான் AI க்கு அதிகம் பயப்பட வேண்டிய சூழல் வரும்.

" ஒட்டு மொத்தமாக இந்த AI மனிதனின் இடத்தை நிரப்புமா என்றால், அது என்றும் மனித மூளைக்கு நிகராக முடியாது, ஆனால் மனிதன் இந்த AI மூலம் பல அசாத்திய விந்தைகளை நிகழ்த்தி காட்டுவான் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை "