உலகெங்கும் 5ஜி தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த புதிய சேவையை அதிகளவில் வழங்க டெலிகாம் நிறுவனங்கள் கடுமையான போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. நவீன இணைய இணைப்பின் வேகம் பலருக்குப் பயனாக இருந்தாலும், கதிர்வீச்சின் பாதிப்பு குறித்து பலரும் கவலைப்பட்டு வருகின்றனர்.
ப்ராஜெக்ட் GOLIAT என்ற குழுவின் ஆய்வாளர்கள், செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வு இந்தியா முழுவதும் 30,000 பேரை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டுள்ளது.
ஏரோபிளேன் மோடில் செல்போன் பயன்படுத்தும் போது கதிர்வீச்சு குறைவாக இருக்கும். டவுன்லோட் செய்யும் போது செல்போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அளவு அதிகரிக்கும். கிராமப்புறங்களில் நகரப்புறங்களை ஒப்பிடுகையில் கதிர்வீச்சு குறைவாக உள்ளது.
ஆய்வில், கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறபோது அது மனிதர்களின் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, நகர்ப்புற பகுதிகளில் 5ஜி செல்போனின் மின்காந்த கதிர்வீச்சு வெளிப்பாடு அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது.