Zero Penalty Savings Account - Balance எப்பவுமே கம்மியா தான் இருக்கும், Penalty யும் பிடிக்க கூடாது, அப்படி ஒரு வங்கி கணக்கு வேணும்னு நினைக்கிறீங்களா, அப்படின்னா உங்களுக்கு தான் இந்த தொகுப்பு.
Zero Penalty Savings Account - பொதுவாக கடந்த 2023-24 காலக்கட்டத்தில் மட்டும் பொதுத்துறை வங்கிகளில், மக்களின் வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லை என பிடிக்கப்பட்ட மொத்த தொகை 8500 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது, வருடம் வருடம் இப்படி ஒரு புள்ளி விவரம் வெளிப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கூட அரசும், மத்திய வங்கியும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை.
அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி 2023-24 காலக்கட்டத்தில் மக்களின் வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லை என 2,331 கோடி பிடித்தம் செய்து இருக்கிறது, இந்த பிடித்தம் செய்யப்பட்ட தொகை கடந்த ஆண்டை விட கிட்டதட்ட 500 கோடி அதிகம், அது தான் உங்களுக்கு பிடித்தம் செய்யாத ஜன்தன் கணக்கு இருக்கிறதே என்றால், அதில் பரிவர்த்தனைகளுக்கு பல லிமிட்டேசன்கள் இருக்கிறது.
ஒரு வேளை அரசு எந்த வித பரிவர்த்தனை லிமிட்டேசன்களும் இல்லாமல் ஜன்தன் கணக்கு துவங்கலாம் என்று கூறினால் அது ஒரு சிறந்த திட்டமாக பார்க்க முடியும், சரி அப்படி என்றால் போதிய இருப்பிற்கு பிடித்தம் செய்யாத வங்கிகள் இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கிறது, பொதுத்துறை வங்கியே இருக்கிறது, ஸ்டேட் பாங்க் 2020 க்கு பின்னர் போதிய இருப்பு இல்லாமைக்கு பணம் பிடிப்பது இல்லை.
அது போல Yes Bank, Axis Bank உள்ளிட்ட தனியார் வங்கிகளும் போதிய இருப்பு இல்லாமைக்கு பணம் பிடித்தம் செய்வது இல்லை, இதர வங்கிகள் சேமிப்பு கணக்கில் போதிய இருப்பு இல்லை எனில் மாதம் மாதம் தவறாமல் ஏதோ மாத தவணை போல ரூ 50 முதல் 100 வரை பிடித்தம் செய்து கொண்டு இருக்கின்றன, இதை தவிர்க்க வேண்டுமானால் SBI, Yes Bank, Axis Bank இதில் எதில் ஆவது உங்களது சேவிங்ஸ்சை மாற்றிக் கொள்ளுங்கள்.