Bank Which Having Largest Deposits - தேசிய அளவில் அதிக டெபாசிட்களை கொண்டு இருக்கும் வங்கி எது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Bank Which Having Largest Deposits - பொதுவாக வங்கிகள் என்பது பணங்களை கையாளும் ஒரு நிதி நிறுவனம் ஆகும், ரிசர்வ் வங்கியின் சட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு பணம் போடுதல், பணம் எடுத்தல், கடன், FD, வைப்பு தொகை என பல விடயங்களை வங்கிகள் கையாண்டு வருகிறது, அந்த வகையில் வங்கிகள் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை 12 பொதுத்துறை வங்கிகள் உட்பட மொத்தம் 141 கமெர்சியல் வங்கிகள் இருப்பதாக ஒரு தரவு கூறுகிறது, மொத்தமாக நாள் ஒன்றுக்கு வங்கிகளில் நடக்கும் பரிவர்த்தனை மட்டும் இலட்சம் கோடிகளை தாண்டும், அந்த வகையில் எந்த இந்திய வங்கிகள் அதிக டெபாசிட்களை பெறுகின்றன என்பது குறித்து விவாதிக்க தான் இந்த தொகுப்பு.
பொதுவாக டெபாசிட்களை பொறுத்தவரை எப்போதுமே அரசின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தான் முதலிடம், வருடத்திற்கு கிட்டத்தட்ட 49 இலட்சம் கோடி டெபாசிட்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெறுவதாக ஒரு தகவல், அதற்கு அடுத்தபடியாக தனியார் வங்கியான HDFC வங்கி அப்பட்டியலில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
HDFC வங்கி வருடத்திற்கு கிட்டத்தட்ட 4.66 இலட்சம் கோடிகளை டெபாசிட்டாக பெறுவதாக தகவல், மூன்றாவது இடத்தில் ICICI வங்கி வருடத்திற்கு 1.87 இலட்சம் கோடிகளை டெபாசிட்டாக பெறுவதாக தகவல், நான்காவது இடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி வருடத்திற்கு 1.10 இலட்சம் கோடிகளை டெபாசிட்களாக பெறுவதாக தகவல்,
" ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் டெபாசிட் என்பது பட்டியலில் இருக்கும் மற்ற வங்கிகளில் டெபாசிட்டை விட பன்மடங்காக இருப்பது குறிப்பிடத்தக்கத்து "