• India
```

98 சதவிகிதம் 2000 ரூபாய் நோட்டுகள்...ரிசர்வ் வங்கிக்கு திரும்பி விட்டதாக தகவல்...!

More Than 98% Of The Rs 2,000 Notes Have Returned To RBI

By Ramesh

Published on:  2024-11-26 22:55:54  |    160

98% Of The Rs 2,000 Notes Have Returned To RBI - ரிசர்வ் வங்கி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்த நிலையில், கிட்டதட்ட 98% இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி விட்டதாக தகவல் விடுக்கப்பட்டு இருக்கிறது.

98% Of The Rs 2,000 Notes Have Returned To RBI - ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் இருக்கும் அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளையும் திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்தது, இந்த அறிவிப்பு வெளியானதும் பலரும் தங்களிடம் இருந்த அனைத்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளையும் வங்களில் மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர், கடந்த அக்டோபர் வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்காக டெட்லைனும் கொடுக்கப்பட்டு இருந்தது.

இதனால் ஓரளவிற்கு அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளும் வங்கிகளுக்கு திரும்ப ஆரம்பித்தது, அக்டோபர் முடிந்து தற்போது நவம்பர் ஆகி இருக்கும் நிலையில் அக்டோபர் வரை எவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்பட்டது என்ற அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது, கிட்டதட்ட 98% இரண்டாயிரம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு இருப்பதாக தகவல்.



மே 19,2023 நிலவரத்தின் படி 3,55,858 கோடி மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் இருந்தன, இவற்றுள் 3,48,591 கோடி மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு இருக்கிறதாம், கிட்டதட்ட 98% 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு இருக்கிறதாம், டெட்லைன் முடிந்து விட்டதால் இனி வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது,

2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பிற்கு பிறகு இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே 2000 ரூபாய் நோட்டுகள் காணாமல் போயின, பதுக்குபவர்களும் வசதியான வகையில் 2000 ரூபாய் நோட்டுகள் அமைந்ததால் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவதாக அறிவிக்கபட்டது, தற்போது 98% திரும்ப வந்து விட்டது.