Gold Loan May Soon Equated By EMI - பொதுவாக பெர்சனல் லோன், ஹோம் லோன், கார் லோன் உள்ளிட்டவைகளுக்கு தான் மாதத்தவணை என்பது இருக்கும், ஆனால் தங்க நகைக்கடன்களுக்கு மாதத்தவணை என்பது இருக்காது, நகையை அடகு வைத்து கடனை பெற்றுக் கொண்டு பெற்ற நாளில் இருந்து ஒரு வருடத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் வட்டியையும் அசலையும் திருப்பி செலுத்தும் வசதியை வங்கிகள் வழங்கும்.
வாடிக்கையாளர்களுக்கு எளிதான முறையில் அவர்கள் பெறும் லோனாக தங்க நகைக்கடன் இருந்து வருகிறது, தங்கத்தை வைத்தோமோ கடனை பெற்றோமோ, ஒரு வருடத்திற்குள் அசலையும், வட்டியையும் திருப்பி செலுத்தி நகையை மீட்டோமோ என வாடிக்கையாளர்களுக்கு ஒரு எளிதான கடன் பிராசஸ் ஆக தங்க நகை கடன் இருந்து வந்தது, இது போக நகைக்கடனில் வட்டியும் குறைவு.
இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஒரு சிலர் தங்க நகைக்கடன் பெற்று விட்டு வருட இறுதியில் வட்டியை மட்டும் கட்டி விட்டு மீண்டும் இன்னும் நீட்டித்து விடுகின்றனர், மற்ற கடன்களில் வட்டியும் அசலும் மாதம் மாதம் வங்கிக்கு மாதத்தவணை மூலம் வந்து கொண்டு இருக்கும், ஆனால் தங்க நகைக்கடன்களில் அப்படி இல்லை, கடனை பெற்றுக் கொண்டு வட்டியை மட்டுமே செலுத்தி இழுத்தடிக்கலாம்.
இவ்வாறான குறைபாடுகளை களைய ரிசர்வ் வங்கி தங்க நகைக்கடன்களுக்கும் மாதத்தவணைகளை அறிமுகப்படுத்த திட்டம் இட்டு இருக்கிறது, இதனால் மற்ற கடன்களை போல தங்க நகைக் கடனிலும் மாதம் மாதம் அசலும் வட்டியும் வங்கிக்கு வந்து சேரும், இதனால் வங்கிகளுக்கு தங்க நகைக்கடன் மூலம் ஏற்படும் இழப்பு சரி செய்யப்படும் என ரிசர்வ் வங்கி நம்புகிறது.