• India
```

பிக்ஸடு டெபாசிட்டுகளுக்கு... சிறந்த வட்டி விகிதம் தரும் வங்கிகள்...!

Highest FD Rates Banks | Which Bank is Best For Fixed Deposit

Highest FD Rates Banks -பிக்ஸடு டெபாசிட்டுகளுக்கு சிறந்த வட்டி தரும் பொது துறை, தனியார் வங்கிகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிக்ஸடு டெபாசிட் என்றால் முதலில் என்ன?

பிக்ஸடு டெபாசிட் என்பது, வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சாதாரண வட்டி விகிதத்தை விட, கொஞ்சம் அதிக வட்டி விகிதம் வழங்கி வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் ஒரு சேவிங் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு வட்டி விகிதத்தை வழங்கி வருகின்றன. குறைந்த பட்சம் 3 சதவிகிதம் முதல் அதிகபட்சம்  9 ச்தவிகிதம் வரை வங்கிகளும் பைனான்ஸ் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் வட்டி விகிதம் வழங்குகின்றன.

சரி, எந்தெந்த வங்கிகள் பிக்ஸடு டெபாசிட்களுக்கு எவ்வளவி வட்டிகள் வழங்குகின்றன?

தனியார் வங்கிகளுள் பந்தன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு 8.05 சதவிகிதம் வரையில் பிக்ஸடு டெபாசிட்களுக்கு வட்டிகளை வழங்குகிறது, பொதுத்துறை வங்கிகளை எடுத்துக் கொண்டால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு 7.1 சதவிகிதம் வரையில், பிக்ஸடு டெபாசிட்களுக்கு வட்டிகளை வழங்குகிறது, ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளை எடுத்துக் கொண்டால் ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியும், உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு 8.25 சதவிகிதம் வரை வட்டிகளை வழங்குகிறது.


வெளிநாட்டு வங்கிகளுள் பிக்ஸடு டெபாசிட்களுக்கு, டியூட்சே வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக 7 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது, பைனான்ஸ் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், பிக்ஸடு டெபாசிட்களுக்கு மணிபல் ஹவுசிங் பைனான்ஸ் சிண்டிகேட் லிமிட்டடு நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு, ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக 8.25 சதவிகிதம் வரை வட்டி விகிதம் வழங்குகிறது. எந்த ஒரு சேமிப்பாக இருந்தாலும் சரி, அதை முறையாக செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கி அல்லது தனியார் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்வது நல்லது, பைனான்ஸ் நிறுவனங்கள் என்னும் போது அது உங்களுக்கு நம்பிக்கையான நிறுவனமாக தென்பட்டால் மட்டும் முதலீடு செய்யுங்கள், பெரிதாக ஏதும் வட்டி விகிதம் மாறி விட போவதில்லை மிஞ்சி போனால் ஒரு 0.25 விகிதம் தானே