Which Bank Is Best For Fixed Deposit In Tami -ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, HDFC, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் 3% முதல் 7.75% வரை FD வட்டி விகிதங்களை கொடுக்கின்றன.அதை பற்றி மேலும் விரிவாக பார்க்கலாம்.
Which Bank Is Best For Fixed Deposit In Tamil -நாம் வாழும் இக்காலத்தில் பணம் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.முதலீட்டு திட்டங்களில் பிக்சட் டெபாசிட் (Fixed Deposit) என்பது அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.இதனை டெர்ம் டெபாசிட் (Term Deposit) என்றும் அழைக்கலாம். பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்குப் பதிலாக, அபாயங்கள் குறைவாக இருப்பதால் பிக்சட் டெபாசிட்கள் மிகவும் பிரபலமாக உள்ளது.மேலும், பல்வேறு வங்கிகள் 3 முதல் 7.50 சதவீதம் வரை வட்டி விகிதங்களை முதலீட்டு காலத்தின் அடிப்படையில் வழங்கி வருகின்றன.
எந்தவொரு முதலீட்டில் ஈடுபடுவதற்கு முன், வெவ்வேறு வங்கிகள் வழங்கும் நிலையான சேமிப்பு கணக்குகளில் (FD) வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதன் மூலம், அந்த வங்கிகள் வழங்கும் FD வட்டி விகிதங்களை நீங்கள் பார்த்து நல்லதாக தேர்வு செய்ய முடியும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பிக்சட் டெபாசிட் (FD) முதலீடுகளுக்கு 3% முதல் 7% வரை வட்டி கொடுத்து வருகிறது. மூத்த குடிமக்களுக்கு 50 பேசிக் பாயிண்டுகள் (bps) கூடுதலாக வழங்கப்படுகின்றது. ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் FD-க்களுக்கு 6.80% வட்டி விகிதத்தை வழங்குகிறது.மேலும், 2 முதல் 3 ஆண்டு காலம் கொண்ட FD-க்களுக்கு 7% வட்டி விகிதத்தை கொடுக்கிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க்: (இவை ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு) பஞ்சாப் நேஷனல் பேங்க் பிக்சட் டெபாசிட்களில் 3.50% முதல் 7.50% வரை வட்டி வழங்குகிறது. ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் FD-க்களுக்கு, வழக்கமான முதலீட்டாளர்களுக்கு 6.75% வட்டி விகிதம் உள்ளது. மூத்த குடிமக்கள் ஒரு வருடத் திட்டத்தில் 7.25% வட்டி விகிதத்தைப் பெற முடியும்.
ஐசிஐசிஐ பேங்க்: (ரூ. 5 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு) ஐசிஐசிஐ பேங்க் FD திட்டங்களுக்கு 3% முதல் 7.50% வரை வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதல் 0.5% வட்டி வழங்கப்படுகிறது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை பல்வேறு கால அளவுகளில் பிக்சட் டெபாசிட்களுக்கு 3.50% முதல் 7.50% வரை வட்டி விகிதங்கள் கொடுக்கப்படுகின்றன.
HDFC பேங்க் FD விகிதங்கள்: HDFC வங்கி ஒரு வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 6.60% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் 7.10% வட்டி விகிதத்தைப் பெற முடியும். HDFC வங்கி 3% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது, இது முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கும் முதிர்வு காலத்திற்கு ஏற்ப மாறுபடும். மேற்கண்ட வட்டி விகிதங்கள் காலாந்தரமாக அல்லது வருடாந்தரமாக மாறுபட வாய்ப்பு இருக்கிறது. உண்மையான வட்டி விகிதங்களை அறிய, அருகிலுள்ள வங்கி கிளைகளைகளுக்கு சென்று தெரிவு செய்யவும்.