• India
```

நார்மல் சேமிப்பு கணக்கிற்கே 7.25 சதவிகிதம் வரை வட்டி..எந்த வங்கி கொடுக்கிறது தெரியுமா..?

Which Bank Gives Highest Interest For Normal Savings Account

By Ramesh

Published on:  2024-11-07 20:12:35  |    191

Which Bank Gives Highest Interest For Normal Savings Account - வங்கிகளில் துவங்கப்படும் நார்மல் சேமிப்பு கணக்கிற்கே 7.25 சதவிகிதம் வரை வட்டி வழங்கும் வங்கு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Which Bank Gives Highest Interest For Normal Savings Account - பொதுவாக எந்த வங்கிகளுமே நார்மலான சேமிப்பு கணக்கிற்கு பெரிதாக வட்டி வழங்குவது இல்லை, ஒரு காலத்தில் 4 முதல் 5 சதவிகிதமாக வட்டி விகிதங்கள் எல்லாம் தற்போது இரண்டு முதல் மூன்று சதவிகிதம் வரை வந்து விட்டது, ரிசர்வ் வங்கியின் கடுமையான பணவியல் கொள்கை கட்டுப்பாடுகள், வங்கிகளிடையே உருவான போட்டி மூலதனங்கள் இவை எல்லாம் வட்டி குறைப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.

தற்போது அதிகபட்சமாக நார்மல் சேமிப்பிற்கு வட்டி வழங்கும் ஒரே ஒரு பொதுத்துறை நிறுவனமாக போஸ்ட் ஆபிஸ் இருக்கிறது, போஸ்ட் ஆபிஸ் சேமிப்புகள் நார்மல் சேமிப்பு அக்கவுண்டுகளுக்கு 4 சதவிகிதம் வரை வட்டி வழங்குகின்றன, SBI 2.70 முதல் 3 சதவிகிதம் வரையிலும், HDFC வங்கி 3% முதல் 3.5% வரையிலும், ICICI வங்கி 3% முதல் 3.5% வரையிலும் நார்மல் சேவிங்களுக்கு வட்டி வழங்குகின்றன.



ஆனால் ஒரே ஒரு வங்கி மட்டும் நார்மல் சேமிப்பு கணக்கிற்கு 7.25 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது, அது தான் IDFC First வங்கி, உங்களது வங்கி கணக்கில் 5 இலட்சத்திற்கு மேல் மற்றும் 100 கோடிக்கு உள் இருப்பு இருக்கும் பட்சத்தில் உங்களது நார்மல் வங்கி கணக்கிற்கே 7.25 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது IDFC First வங்கி, இது போக வட்டி காலாண்டுக்கு ஒரு முறை என்றல்லாமல் மாதம் மாதம் வரவு வைக்கப்படுகிறது.

வட்டியில் மட்டும் அல்லாது IDFC First வங்கி பல செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கிறது, ஜீரோ டெபிட் கார்டு சார்ஜஸ், ஜீரோ வருடாந்திர டெபிட் கார்டு கட்டணம், சர்வதேச ATM பயன்பாடுகளுக்கு கட்டணம் இல்லை, IMPS, NEFT க்கு கட்டணம் இல்லை, வங்கி ஸ்டேட்மெண்ட்களுக்கு கட்டணம் கிடையாது, DD, Cheque களுக்கு தனியாக கட்டணம் கிடையாது என இந்தியாவில் எந்த வங்கிகளும் தராத பல அம்சங்களௌ தருகிறது IDFC First வங்கி.