• India
```

வங்கிகளில் FD க்கான வட்டி விகிதம் குறையும் அபாயம்...ஏன் தெரியுமா...?

FD Interest Rate May Affect

By Ramesh

Published on:  2024-12-07 19:52:32  |    169

FD Interest Rate May Affect - ரிசர்வ் வங்கி சமீபத்தில் எடுத்து இருக்கும் ஒரு சில முடிவுகளால் வங்கிகளில் FD க்கான வட்டி விகிதம் குறையும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

FD Interest Rate May Affect - முதலில் வங்கிகளில் ஏன் FD க்கான வட்டி விகிதம் குறையும் அபாயம் இருக்கிறது என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், Repo Rate என்றால் என்ன என்பது குறித்து முதலில் நீங்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும், Repo Rate என்பது வேறு ஒன்றும் அல்ல, வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வாங்கும் கடனுக்கு விதிக்கப்படும் ஒரு வட்டி வீதம் ஆகும்.

Repo Rate என்பது ஏற்றுவதும், இறக்குவதும் குறித்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி கூட்டமைப்பு ஏற்படுத்தி முடிவு செய்யும், பொதுவாக பண வீக்கம், பொருளாதார மாற்றங்கள், GDP உள்ளிட்ட காரணிகளை கொண்டு Repo Rate யை ஏற்றுவதா இறக்குவதா என்பதை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும், சரி இந்த Repo Rate க்கும் FD க்கும் சம்பந்தம் இருக்கிறதா என்றால் ஆம் இருக்கிறது.



ரிசர்வ் வங்கி விதிக்கும் இந்த Repo Rate அதிகரிக்கும் போது வங்கிகளில் இருந்து பயனர்கள் வாங்கும் தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள், காருக்கான கடன்கள் ஆகியவற்றிற்கான வட்டியும் அதிகரிக்கும், அதே சமயத்தில் பயனர்கள் வங்கிகளில் போடுகின்ற Fixed Deposit க்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும், கடைசியாக Repo Rate ரிசர்வ் வங்கியால் மாற்றப்பட்டது என்பது பிப்ரவரி 2023 யில் தான்.

அதற்கு பின்னர் எந்த ஒரு மாற்றமும் Repo Rate யில் தற்போது நடைபெற்ற கூட்டம் வரை கொண்டு வரப்படவில்லை, தற்போது Repo rate 6.5% ஆக இருக்கிறது, இந்த Repo Rate யின் மாறா நிலை தான் வங்கிகள் FD க்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கு ஒரு காரணியாக அமைந்து விட்டது, வெகுவிரைவில் FD க்கான வட்டி வீதத்தை வங்கிகல் குறைக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.