• India

வங்கி கணக்கை பயன்படுத்தி வருடங்கள் ஆகி விட்டதா...பணம் இருக்கா இல்லையான்னு ஏதும் தெரிலயா...ஒரே க்ளிக்கில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

UDGAM Portal To Find Unclaimed Money

By Ramesh

Published on:  2024-12-11 20:38:18  |    1045

UDGAM: Portal To Find Unclaimed Money - பொதுவாக ஒரு சிலர் வங்கிக்கணக்கை திறந்திருப்பர், பல வருடங்கள் ஆகியும் அது பயன்படுத்தாமலே கிடந்து விடும், கணக்கு உரிமையாளர்களும் அதை மறந்து இருப்பர், இன்னும் சில எடுத்துக்காட்டுகள் சொல்ல வேண்டுமானால் ஒரு சில கணவர்கள் மனைவிக்கு வங்கிக் கணக்கு திறந்து கொடுத்து பாதுகாப்பிற்காக அதில் பணத்தை போட்டு எடுத்து புழங்கி வருவார்கள்.

அது கணவருக்கு நியாபகம் இருந்தாலும் அவரின் மனைவிக்கு அந்த அக்கவுண்ட் பிற்காலத்தில் நியாபகத்தில் இல்லாமல் போகலாம், அதில் ஏதும் FD யோ,இல்லை RD யோ, இல்லையேல் அவர் கணவர் போட்டு வைத்த பணமோ இருக்கலாம், அவ்வாறாக நீங்கள் மறந்த அல்லது நியாபகம் இல்லாத வங்கி கணக்கை எப்படி தேடுவது என்பதற்கு பதில் தான் UDGAM என்னும் போர்டல்.



உதாரணத்திற்கு ஒரு கணவர், ஒரு மனைவியின் வங்கி கணக்கை அவரது தொழிலுக்காக பயன்படுத்தி இருக்கிறார் என வைத்துக் கொள்வோம், அது ஒரு வங்கியாகவோ, பல வங்கியாகவோ இருக்கலாம், அதை மனைவு மறந்து இருக்கலாம், கணவர் தவறி இருக்கலாம் இத்தகைய சூழலில் பெரும் உதவியாக இருக்க போவது தான் இந்த UDGAM என்னும் போர்டல்.

சரி எப்படி ரிஜிஸ்டர் செய்து வங்கிக் கணக்கை தேடுவது?

1) https://udgam.rbi.org.in/unclaimed-deposits/#/login முதலில் இந்த லிங்கிற்குள் சென்று உங்களது மொபைல் நம்பர், பெயர் உள்ளிட்டவைகளை கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும்,

2) பின்னர் அதே பக்கத்தில் மொபைல் நம்பர், Password, OTP உள்ளிட்ட தகவல்களை உள்ளிட்டு Login செய்து கொள்ளவும், 

3) பின்னர் நீங்கள் தேடுதலுக்கு உட்படுத்த வேண்டிய வங்கிக்கணக்கில் இணைக்கப்பட்ட பான் கார்டு தகவல், சரியான பெயர் விவரம்,  வோட்டர் ஐடி எண், பாஸ்போர்ட் இருந்தால் பாஸ்போர்ட் தகவல், பிறந்த தேதி உள்ளிட்டவைகளுள் குறைந்த பட்ச தகவல்களை, உங்களிடம் இருப்பவைகளை மட்டும் உள்ளிட வேண்டும்.

4) தேடுதலுக்குரியவர் எந்த வங்கிக்கணக்கில் சரியாக கணக்கு வைத்து இருக்கிறார் என தெரியவில்லை என்றால் ALL என்ற ஆப்சனை க்ளிக் செய்து தேடலுக்கு உட்படுத்தவும்,

5) பின்னர் வங்கி, Unclaimed Deposit Reference Number, வங்கியின் முகவரி உள்ளிட்டவைகள் உங்களுக்கு PDF ஆக காண்பிக்கும்.

6) அதை Print எடுத்துக் கொண்டு அனைத்து வங்கிகளுக்கும் நேரடியாக சென்று உங்களது அல்லது நீங்கள் சம்பந்தப்பட்டவர்களின் Unclaimed பணத்தை, FD யை, RD யை மீட்கலாம்.