The RBI Asks Banks To Reduce The Number Of Inactive Accounts - வங்கிகள் கொடுத்த செயல்படாத வங்கிக் கணக்குகளின் அதீத லிஸ்ட்களால் ரிசர்வ் வங்கியே ஆடிப் போய் இருப்பதாக தகவல்.
The RBI Asks Banks To Reduce The Number Of Inactive Accounts - பொதுவாக ஒரு வங்கிக் கணக்கில், நீண்ட நாட்களாக பணம் எடுப்பது, பணம் போடுவது போன்ற எந்த வித செயல்பாடுகளும் இல்லாமல் இருந்தால், அந்த வங்கி கணக்கு, செயல்படாத வங்கி கணக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த அக்கவுண்ட் வங்கிகளால் முடக்கப்படும், அந்த வங்கிக் கணக்கில் இருக்கும் பணமும் செயல்படாத பணமாகவே கடைசி வரை இருக்கும்.
பொதுவாக இந்தியாவில் 35% முதல் 38% வங்கிக் கணக்குகள் செயல்படாத வங்கி கணக்குகளாக இருப்பதாக தகவல், கிட்டத்தட்ட செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்னிக்கை மட்டும் 300 மில்லியனை தொடும் என கருதப்படுகிறது, அதில் யாராலும் கோரப்படாத பணம் என்பது மட்டும் கடந்த மார்ச் மாத நிலவரப்படி கிட்டதட்ட ரூ 78,213 கோடியாக இருப்பதாக தகவல். தற்போது அதும் அதிகரித்து இருக்கலாம்.
இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது செயல்படாத வங்கிகளில் இருக்கும் கோரப்படாத பணம் என்பது 26% அதிகரித்து இருப்பதாக தகவல், இது ஒரு அதீத உயர்வாக பார்க்கப்படுகிறது, இதனை தொடர்ந்து வங்கி கணக்குகளை பகுப்பாய்வு செய்த RBI, வங்கிகளிடம் செயல்படாத கணக்குகள் அனைத்தையும் விரைவில் முறையான வகையில் ஆக்டிவ் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் செயல்படாத கணக்குகளை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் எளிதாக ஆக்டிவ் செய்யும் வகையில் வங்கிகள், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் உள்லிட்டவைகளிலேயே வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும், செயல்படாத வங்கி கணக்குகள் குறித்து வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி, ஏனைய வங்கிகளை அறிவுறுத்தி இருக்கிறது.