Sukanya Samriddhi Yojana In Tami -பெண் குழந்தைகளின் எதிர்கால நலனைப் பாதுகாக்கும் *சுகன்யா சம்ரிதி யோஜனா* சிறந்த முதலீட்டு திட்டமாக உள்ளதுடன், 15 ஆண்டுகளில் ரூ. 46 லட்சம் வரை பெற முடியும். இது பெண்களின் கல்வி மற்றும் திருமண செலவுகளை சேமிக்க சிறப்பான வாய்ப்பாகும்.
Sukanya Samriddhi Yojana In Tamil -பெண் குழந்தைகளின் எதிர்கால நலனைப் பாதுகாக்கும் வகையில், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், ஒன்றிய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது, கல்வி மற்றும் திருமண செலவுகளைச் சேமிக்க உதவும் சிறந்த முதலீட்டு திட்டமாக உள்ளது.
இந்த திட்டத்தில், பெண் குழந்தை 10 வயது எட்டும் வரை கணக்கு திறக்க இயலும், மேலும் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். 8.2% வட்டி விகிதத்தில், 15 ஆண்டுகளில் மொத்தமாக ரூ. 46 லட்சம் வரை பெற்று வரலாம்.
வட்டி விகிதம் மற்றும் முதலீட்டு விவரங்களை பற்றி பார்க்கலாம்,
- குறைந்தபட்ச முதலீடு: ரூ.250
- அதிகபட்ச முதலீடு: ரூ.1.5 லட்சம்
- வட்டி விகிதம்: 8.2%
15 ஆண்டுகளில், மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்து வந்தால், 27.92 லட்சம் முதிர்வு தொகையாக கிடைக்கும். 1 லட்சம் ரூபாய் வருடாந்திர முதலீடு செய்தால், 46.53 லட்சம் பெறலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், வரி விலக்கும் வழங்குவதால், பெண் குழந்தைகள் பெற்றோருக்கான சிறந்த முதலீட்டுத் திட்டமாக இது உருவாகியுள்ளது.