• India
```

அடேங்கப்பா..ஸ்டேட் பாங் ஆப் இந்தியாவிற்கு பின்னால் இப்படி இரு வரலாறா?

State Bank Of India History Tamil

By Ramesh

Published on:  2024-10-27 05:22:43  |    183

State Bank Of India History Tamil - இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக அறியப்படும் ஸ்டேட் பாங் ஆப் இந்தியாவின் முழுமையான வரலாறு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

State Bank Of India History Tamil - 1806 யில் பாங்க் ஆப் கல்கத்தா என்ற பெயரில் கல்கத்தாவில் மட்டும் செயல்பட்டு வந்தது, அன்று இன்றைய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு இருந்தது ஒரே ஒரு கிளை மட்டும் தான், அதற்கு பின்னர் 1840 யில் உருவான பாங்க் ஆப் பாம்பே, 1843 யில் உருவான பாங்க் ஆப் மெட்ராஸ் உள்ளிட்ட வங்கிகளுடன் இணைந்து ஒரு கூட்டு பங்கு தாரராக செயல்பட்டு வந்தது.

பின்னர் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பாங்க் ஆப் கல்கத்தா, பாங்க் ஆப் பாம்பே, பாங்க் ஆப் மெட்ராஸ் என மூன்றும் இணைக்கப்பட்டு இம்பெரியல் பாங்க் ஆப் இந்தியா என்றதொரு அமைப்பு 1921 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது, ஆங்கிலேயர்கள் அந்த வங்கிக்கு பணத்தை மறு சுழற்சி செய்யவும், அச்சடிக்கவும் உரிமை கொடுத்தனர். 


1921 முதல் சுதந்திரம் அடைந்து 8 வருடங்களுக்கு பிறகும் கூட (1955 வரை) இம்பெரியல் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரிலேயே தான் செயல்பட்டு வந்தது, ஜூலை 1, 1955 அன்று இம்பெரியல் பாங்க் ஆப் இந்தியா ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டிற்குள் வந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என பெயரிடப்பட்டது, தேசம் முழுக்க இருக்கும் பல சிறு சிறு வங்கிகளை எல்லாம் தன்வசப்படுத்தி மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்தது.

இன்று இந்தியாவில் மட்டும் 22,542 கிளைகள், 63,580 ATM கள், சர்வதேச அளவில் 29 நாடுகளில் 242 கிளைகளை கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இயங்கி வருகிறது, இந்த 2024 நிலவரத்தின் படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு என்பது 61.79 இலட்சம் கோடியாக அறியப்படுகிறது, இந்த 2024 யில் மட்டும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் நெட் வருமானம் 61, 076 கோடியாக அறியப்படுகிறது.