Senior Citizen Interest -சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கிகள் வழங்கும் ஃபிக்சட் டெபாசிட்களில் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கிகள் வழங்கும் ஃபிக்சட் டெபாசிட்டுகள், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கூடுதல் சலுகைகளால் புகழ் பெற்ற முதலீட்டு ஆப்ஷனாக இருக்கின்றன.மேலும், இந்த டெபாசிடுகள் 7 நாட்களிலிருந்து 10 வருடங்கள் வரை கால அளவைக் கொண்டுள்ளன.இது முன்கூட்டியே வித்ட்ரா செய்வதற்கான ஆப்ஷன்கள் மற்றும் வரி சேமிப்பு பலன்களும் இருக்கின்றன.
இந்தியாவில் பல முன்னணி வங்கிகள் வழங்கும் சமீபத்திய வட்டி விகிதங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம்,
1.ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: 444 நாட்களுக்கு 7.75% வட்டி வழங்குகிறது.
2.HDFC வங்கி: 4 வருடங்கள் மற்றும் 7 மாதங்களுக்கு 7.9% வட்டி வழங்குகிறது.
3.ஆக்சிஸ் வங்கி: 5 முதல் 10 வருடங்களுக்கு 7.75% வட்டி வழங்குகிறது.
4.பஞ்சாப் நேஷனல் வங்கி: 400 நாட்களுக்கு 7.75% வட்டி வழங்குகிறது.
5.பேங்க் ஆஃப் இந்தியா: 666 நாட்களுக்கு 7.8% வட்டி வழங்குகிறது.
6.ICICI வங்கி:15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கு 7.8% வட்டி வழங்குகிறது.
7.கனரா வங்கி: 444 நாட்களுக்கு 7.75% வட்டி வழங்குகிறது.
8.பேங்க் ஆஃப் பரோடா: 399 நாட்களுக்கு 7.75% வட்டி வழங்குகிறது.
சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் இந்த ஃபிக்சட் டெபாசிடுகளின் முக்கிய நன்மைகள் மற்றும் இதனுடன் சேர்த்து 0.25% முதல் 0.65% அதிக வட்டி விகிதங்களை பெறுவதில் உள்ளது. மேலும், இந்த டெபாசிடுகளை தனிநபரின் பொருளாதார தேவையின் அடிப்படையில் 7 நாட்களிலிருந்து 10 வருடங்கள் வரை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த முறையில் சில அபராதங்களை செலுத்த வேண்டியிருக்கும். ஃபிக்சட் டெபாசிட்டை அடமானமாக வைத்து கடன்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.