SBI Named Best Bank in India for 2024 - இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வங்கிகளுள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதலிடத்தை பிடித்து இருக்கிறது.
SBI Named Best Bank in India for 2024 - அன்றைய காலக்கட்டத்தில் கிட்டதட்ட 1806 யில் பாங்க் ஆப் கல்கத்தா என்ற பெயரில், இன்றைய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கல்கத்தாவில் மட்டும் செயல்பட்டு வந்தது, அன்று இன்றைய வளர்ந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு, இந்தியாவில் இருந்தது ஒரே ஒரு கிளை மட்டும் தான், அதற்கு பின்னர் 1840 யில் உருவான பாங்க் ஆப் பாம்பே, 1843 யில் உருவான பாங்க் ஆப் மெட்ராஸ் உள்ளிட்ட வங்கிகளுடன், பாங்க் ஆப் கல்கத்தா இணைந்து ஒரு கூட்டு பங்கு தாரராக செயல்பட்டு வந்தது.
பின்னர் 1921 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பாங்க் ஆப் கல்கத்தா, பாங்க் ஆப் பாம்பே, பாங்க் ஆப் மெட்ராஸ் என மூன்றும் இணைக்கப்பட்டு இம்பெரியல் பாங்க் ஆப் இந்தியா என்றதொரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது, ஆங்கிலேயர்கள் அந்த வங்கிக்கு பணத்தை மறு சுழற்சி செய்யவும், அச்சடிக்கவும் உரிமை கொடுத்தனர். ஜூலை 1, 1955 அன்று இம்பெரியல் பாங்க் ஆப் இந்தியா ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டிற்குள் வந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என பெயரிடப்பட்டது.
தேசம் முழுக்க இருக்கும் பல சிறு சிறு வங்கிகளை எல்லாம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தன்வசப்படுத்தி மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்தது.இன்று இந்தியாவில் மட்டும் 22,542 கிளைகள், 63,580 ATM கள், சர்வதேச அளவில் 29 நாடுகளில் 242 கிளைகளை கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இயங்கி வருகிறது, இந்த 2024 நிலவரத்தின் படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு என்பது 61.79 இலட்சம் கோடியாக அறியப்படுகிறது.
இவ்வாறாக படிப்படியாக உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு தேசம் முழுக்க சிறந்த சேவையை வழங்கி வருகிறது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இன்று அமெரிக்காவின் குளோபல் பைனான்ஸ் என்ற பிரபல நாளிதழ் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில், இந்தியாவில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வரும் வங்கிகளுள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதலிடத்தை பிடித்து இருக்கிறது, இந்தியாவின் நம்பிக்கைக்கு உகுந்த வங்கியாகவும் குளோபல் பைனான்ஸ் நாளிதழ் SBI வங்கியை தெரிவு செய்து இருக்கிறது.