• India
```

வாட்ஸ்அப் மூலமாக இனி மினி ஸ்டேட்மெண்ட் பாக்கலாம்.. எப்படி தெரியுமா?

SBI Mini Statement Check Number

By Dhiviyaraj

Published on:  2025-01-25 08:42:01  |    288

தற்போது SBI வங்கி, இன்டர்நெட் சேவை இல்லாமலே மினி ஸ்டேட்மெண்ட் மூன்று வகையில் பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

தற்போது SBI வங்கி, இன்டர்நெட் சேவை இல்லாமலே மினி ஸ்டேட்மெண்ட் மூன்று வகையில் பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளது. அது தொடர்பான தகவலை இன்று பார்க்கலாம்..

அதாவது இனி மிஸ்ட் கால், எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக மினி ஸ்டேட்மெண்ட் பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி, எஸ்.பி.ஐ வங்கி கணக்குடன் நீங்கள் பதிவு செய்ய எண்ணில் இருந்து 9223866666 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கு கால் செய்தால் உடனே அழைப்பு துண்டிக்கப்படும். அதன் பின்  எஸ்.எம்.எஸ் மூலம் மினி ஸ்டேட்மெண்ட் வரும். 

அதே போல எஸ்.எம்.எஸ் மூலம் தெரிய விரும்பினால் MIS என டைப் செய்து ஸ்பேஸ் விட்டு உங்கள் அக்கவுண்ட் எண் டைப் செய்து 9223866666 இந்த எண்ணிற்கு அனுப்ப வேண்டும். சில மணி நேரங்களில்  மினி ஸ்டேட்மெண்ட் வந்துவிடும். அடுத்தபடியாக வாட்ஸ்அப் மூலம் பெற இந்த எண்ணிற்கு 91-9022390229 வாட்ஸ்அப்-ல் மெசேஜ் அனுப்பவும். உடனே கடைசி கடைசி 4 டிரான்ஸாக்ஷன் பற்றிய மினி ஸ்டேட்மெண்ட் வாட்ஸ்அப்-ல்  வந்துவிடும்.