• India
```

45 லட்சத்துக்கு Home Loan! SBI-ன் புதிய அறிவிப்பு..வெளியான EMI விவரங்கள் !

SBI Bank Home Loan Interest | SBI Housing Loan EMI Per Lakh

SBI Bank Home Loan Interest -ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) ரூ.45 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால், 20 ஆண்டுகளுக்கு மாதத்துக்கு எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம். CIBIL மதிப்பெண் அடிப்படையில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. 9.15% வட்டியில் மாதம் ரூ.40,923 EMI ஆகும்.

SBI Bank Home Loan Interest -ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) ரூ.45 லட்சம் வீட்டு கடன் வாங்கினால், 20 வருடத்திற்கு மாத EMI எவ்வளவு ஆகும் என்பதை பார்க்கலாம்.

இன்றும் வீடு வாங்குவது பல மக்களின் கனவாக இருக்கிறது.குறிப்பாக மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு வீடு வாங்குவதோ அல்லது வீடு கட்டுவதோமிகப் பெரிய கனவாகவே இருக்கிறது.இந்நிலையில், SBI போன்ற வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி EMI-களை செலுத்தும் முடிவு பெரும்பாலும் வாழ்க்கையின் முக்கியமான நீண்ட கால திட்டமாக மாறிவிடுகிறது.


EMI தொகை, கடனுக்கான வட்டி விகிதம் (Interest Rate) அடிப்படையில் மாறுபடும். வட்டி விகிதம் CIBIL மதிப்பெண்ணைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

  

சிபில் ஸ்கோர் 800+ அதாவது சிபில் ஸ்கோர் 800 க்கும் அடர்த்திகமாக இருந்தால் 9.15% வட்டியும், சிபில் ஸ்கோர் 700 முதல் 799 வரை இருந்தால் 9.25% வட்டியும், அதே போல் சிபில் ஸ்கோர் 650 முதல் 699 வரை இருந்தால் 9.45% வட்டியும் பெறலாம். 


EMI ன் கணக்கீடுகளைப் பார்க்கலாம்,


சிபில் ஸ்கோர் 800 க்கும் அதிகமாக வைத்துக்கொண்டால், 9.15% வட்டியுடன் 20 ஆண்டுகளுக்கு ரூ.45 லட்சம் வீட்டுக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.அப்படி வாங்கினால், ஒரு மாதத்திற்கு EMI ன் மதிப்பு ரூ.40,923 ஆகும். இதற்கு மொத்தமாக திருப்பிச் செலுத்தும் தொகை ரூ.98,21,472 ஆகும்.மேலும், இதில் வட்டி தொகை மட்டும் ரூ.53,21,472 ஆகும்.