Repo Rate And Inflation Link - Repo Rate மற்றும் பணவீக்கம் இடையில் இருக்கும் சம்பந்தம் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் Repo Rate என்பது என்ன மற்றும் பணவீக்கம் என்பது என்ன, என்பவைகள் முறித்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது, Repo Rate என்பது வேறு ஒன்றும் அல்ல, வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வாங்கும் கடனுக்கு விதிக்கப்படும் ஒரு வட்டி வீதம் ஆகும்.
பொதுவாக பணவீக்கம், பொருளாதார மாற்றங்கள், GDP உள்ளிட்ட காரணிகளை கொண்டு Repo Rate யை ஏற்றுவதா இறக்குவதா என்பதை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும், Repo Rate என்பதை ஏற்றுவதும், இறக்குவதும் குறித்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி கூட்டமைப்பு முடிவெடுக்கும், பிப்ரவரி 2023 க்கு பிறகு Repo Rate யில் எந்த வித மாற்றமும் இல்லாமல் 6.5 சதவிகிதத்தில் நீடிக்கிறது.
பணவீக்கம் என்பது பொருளின் விலைக்கு எதிராக பணத்தின் மதிப்பு குறைவது என பொருள்படுகிறது, அதாவது ஒரு நாட்டில் அந்த நாட்டின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி திறன் இல்லை எனில் அங்கு பொருள்களின் விலை தாறுமாறாக உயரும், பணத்தின் மதிப்பு குறைந்து பொருள்களின் விலை விஞ்சி நிற்கும், இந்த நிலையை தான் பொருளாதாரத்தில் பணவீக்கம் என்று கூறுவார்கள்.
பொதுவான பொருளியல் கோட்பாடு என்பது ரிசர்வ் வங்கி, Repo Rate யை உயர்த்தினால், தேசத்தில் நிலவும் பணவீக்கம் கட்டுப்படும், அது எப்படி எனக்கேட்டால், ரிசர்வ் வங்கி Repo Rate யை உயர்த்தி விட்டால், வங்கிகள் வட்டி அதிகம் என்று ரிசர்வ் வங்கியிடம் இருந்து வாங்கும் கடனை குறைக்க முயலும், மக்களுக்கு பணத்தின் ஆதாரத்தை தரும், வங்கிகளிடம் பணம் குறையும் போது மக்களின் கைகளிலும் பணம் குறையும்.
அவ்வாறாக மக்கள் கையில் பணம் கம்மியாக இருக்கும் போது பொருள்களையோ அல்லது ஏதேனும் சேவையையோ அதிகம் வாங்க விரும்ப மாட்டார்கள், பொருள்கள் வாங்க நுகர்வோர்கள் இல்லாத சந்தையில் பொருளின் விலை அதுவாக குறையும் அல்லவா, அது போல நாட்டின் விலைவாசிகளும் அதுவாக குறைந்து பணவீக்கமும் கட்டுப்படும், இது தான் Repo Rateக்கும் பணவீக்கத்திற்குமான தொடர்பு.
அதே சமயத்தில் ரிசர்வ் வங்கி Repo Rate யை உயர்த்தும் போது, ’நீங்கள் மட்டுமா வட்டியை உயர்த்துகிறீர்கள், நாங்களும் உயர்த்துவோம்’ என வங்கிகள் தனிநபர் கடன், வீட்டுக்கடன், கார் கடன் உள்ளிட்டவைகளுக்கான வட்டி வீதத்தை அதிகரிக்கும், வங்கியில் கடன் வாங்கியவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள், இது Repo Rate அதிகரிப்பு செய்யும் போது உருவாகிற ஒரு எதிர்வினையாக பார்க்கப்படுகிறது.