RBI Gold Bond Scheme -மத்திய அரசின் தங்கப் பத்திரத் திட்டம் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள இது பயனாளர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
RBI Gold Bond Scheme -இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 30, 2015 அன்று சவரன் தங்கப் பத்திரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மக்கள் சந்தையை விட குறைந்த விலையில் தங்கம் வாங்கும் வாய்ப்பைப் பெற்றனர். தற்போது, இந்த திட்டத்தை அரசாங்கம் முடிக்கலாம் என்ரூ முடிவு செய்துள்ளது. அதற்கான இறுதி முடிவு செப்டம்பர் 2024 இல் எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2024 வரும் செப்டம்பரில், ரிசர்வ் வங்கியின் கடன் பெறும் காலண்டர் கூட்டத்தில், இந்தத் திட்டத்தின் எதிர்காலம் விவாதிக்கப்படும் என்று அறிக்கை சொல்லப்படுகிறது. தங்கப் பத்திரத் திட்டத்தைத் தொடர்வது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம், ஏனெனில் இது நிதி திரட்டல் மற்றும் தங்கத்தின் தேவையை குறைப்பதற்கான அரசின் முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.
2024 பட்ஜெட்டில், தங்க இறக்குமதி வரி 15% ல் இருந்து 6% ஆக குறைத்தது. இதனால் தான் தங்கத்தின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், முதிர்ச்சியடைந்த பத்திரங்களில் குறைவான வருமானம் கிடைத்ததால், முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.எனவும், இதனால் திட்டத்தை முடிப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்ற செய்தி பரவியிருந்தாலும், அதிகாரிகள் இதை மறுத்துள்ளார்கள்.மேலும், SGB திட்டத்தில் வருமானம் இரட்டை இலக்கத்தில் இருக்கும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
Govt Gold Bond Scheme - முதலீட்டாளர்களுக்கு தங்கப் பத்திரம் 2.5% வருடாந்திர நிலையான வட்டி விகிதத்துடன் சந்தையிலிருந்து வரும் வருமானத்தின் பலனையும் கொடுக்கிறது.அதுமட்டுமல்ல, மூலதன ஆதாயங்களை மீட்டெடுப்பதில் வரி விலக்கு இருக்கிறது.மேலும், பத்திரங்களை கடனுக்கு பிணையமாகவும் பயன்படுத்தலாம் அல்லது பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்துக்கொள்ளலாம்.
முதல் தவணை முதிர்ச்சி
தங்கப் பத்திர திட்டத்தின் முதல் தவணை, 2015 இல் தொடங்கப்பட்டு, நவம்பர் 2023 இல் முதிர்ச்சியடைந்துவிட்டது.முதலீட்டாளர்கள் இதன் மூலம் நல்ல லாபத்தைப் பெற்றுள்ளார்கள். 2016-17 தொடர் I, ஆகஸ்ட் 2016 இல் ரூ. 3,119 க்கு 2.75% வருடாந்திர வட்டி விகிதத்துடன் வெளியிடப்பட்ட பத்திரம், ஆகஸ்ட் 2024 இல் மீட்கப்படும். என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதலீட்டாளர்களின் லாபம் எவ்வளவு இருக்கும் என்பதைக் காத்திருந்து தான் பார்க்க முடியும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2