• India
```

15 சதவிகிதம் மானியத்துடன்...ரூ 2 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை கடன்...!

Pradhan Mantri Rozgar Yojana Details In Tamil

By Ramesh

Published on:  2024-10-24 08:56:52  |    540

Pradhan Mantri Rozgar Yojana Details In Tamil - வேலையில்லாத இளைஞர்கள் சொந்த தொழிலை துவங்கும் வகையில் அவர்களுக்கு ரூ 2 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தி செயலில் இருக்கிறது.

Pradhan Mantri Rozgar Yojana Details In Tamil - சொந்த தொழிலை துவங்க நினைக்கும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவி புரியும் வகையில் சிறு குறு வணிகத்திற்கு ரூபாய் இரண்டு இலட்சம் வரையிலும், உற்பத்தி மற்றும் தொழில் துறை நிறுவனங்களுக்கு ரூபாய் 5 இலட்சம் வரையிலும் கடனுதவி வழங்கும் பிரதமமந்திரி ரோஜ்கர் யோஜனா என்ற திட்டம் ஒன்றிய அரசின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயலில் இருக்கிறது. 

இத்திட்டத்தின் கீழ் லோன் பெற தகுதி

1) இத்திட்டத்தின் கீழ் இணைய குறைந்த பட்சம் நீங்கள் 3 வருடம் ஒரே இருப்பிடத்தின் வசித்திருக்க வேண்டும், இல்லையேல் நிரந்தர வசிப்பிட சான்றிதழ் வாங்க வேண்டி வரும்,

2) குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும்,

3) வேறு எங்கும் லோன் எடுத்து இருக்கும் பட்சத்தில் அது சரியாக கட்டப்பட்டு இருக்க வேண்டும்,

4) மாத குடும்ப வருமானம் 40,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


இத்திட்டத்தின் கீழ் இணைய என்ன செய்ய வேண்டும்?

1) முதலில் உங்கள் தொழிலுக்கான ஒரு பிசினஸ் மாடலை ரெடி செய்ய வேண்டும்,

2) பின்னர் ஆதார், பான் கார்டு, படிப்புச் சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் உள்ளிட்டவைகளை கையில் எடுத்துக் கொண்டு நேரடியாக வங்கிகளை அணுகலாம்,

3) பின்னர் இத்திட்டம் குறித்து கூறினால் அவர்களே ஒரு படிவம்ம் தருவார்கள் அதை நிரப்பி அவர்கள் கேட்கும் ஆவணங்களுடன் படிவத்தை சமர்ப்பித்திடல் வேண்டும்,

4) பின்னர் வங்கியில் இருந்து நேரடி ஆய்வுக்கு உட்பட்டு உங்களது தொழில் குறித்து நேரடி விசாரணை செய்து, எவ்வளவு கொடுக்க முடியும் என்பதை அவர்களே நிர்ணயம் செய்வார்கள். 

இத்திட்டத்தின் பயன் என்ன?

1) சிறு குறு வணிகம் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களின் கனவை இது பூர்த்தி செய்யும்,

2) 15 சதவிகிதம் மானியம் வழங்குவதால் அந்த மானிய ரூபாயில் தொழிலுக்கு உபயோகமாக ஏதாவது செய்து கொள்ள முடியும்,

3) ஐடியாவை மட்டும் வைத்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களின் கனவு தொழிலை நிஜம் ஆக்கிட இத்திட்டம் உதவிகரமாக அமையும்,

4) திருப்பி செலுத்த மூன்று வருடம் முதல் 7 வருட காலம் வரை அவகாசம் கொடுப்பதால் லோன் குறித்த அழுத்தம் இருக்காது.