Post Office Time Deposit Scheme - தபால் அலுவலகத்தின் டெர்ம் டெபாசிட் திட்டம் என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் வங்கிகளுடன் ஒப்பிடும்போது ,3 மற்றும் 5 ஆண்டு FD களில் சிறந்த வட்டியினைபெற முடியும்.
Post Office Time Deposit Scheme - சேமிப்பு என்பது நமது வாழ்வில் ஒரு முக்கியமான அங்கமாக மாறி விட்டது. அனைவரும் இனசரி அவர்களின் தேவைக்கு செலவு செய்வததை தவிர மற்ற பணத்தை சேமித்து வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்க்கும் இது ஒரு நல்ல திட்டமாக இருக்கும். குழந்தைகளின் எதிர்கால தேவைகளுக்காக , ஒரு மொத்த தொகையை முதலீடு செய்ய விரும்புவோருக்கு, தபால் அலுவலகத்தின் டெர்ம் டெபாசிட் திட்டம் என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த திட்டத்தின் மூலம் வங்கிகளுடன் ஒப்பிடும்போது ,3 மற்றும் 5 ஆண்டு FD களில் சிறந்த வட்டியினைபெற முடியும்.
இந்திய தபால் நிலையத்தின் கால அவகாச டெபாசிட் (Post Office Time Deposit) என்பது உங்கள் பணத்திற்கு பாதுகாப்பான மற்றும் நிச்சயமான திருப்பீடு கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்ட முதலீட்டு திட்டம். இது உங்கள் பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் அடகு வைத்திருக்கும் திட்டமாகும்.
இத்திட்டத்தின் வட்டி விகிதம்களை பார்ப்போம்,
1 ஆண்டு காலத்திற்கு: 6.9% வட்டியும், 2 ஆண்டு காலத்திற்கு: 7.0% வட்டியும், 3 ஆண்டு காலத்திற்கு: 7.0% வட்டியும், 5 ஆண்டு காலத்திற்கு: 7.5% வட்டியும், இதன் வட்டி கிகிதங்கள் அனைத்தும் இந்திய ரிசரவ் வங்கிக்கு கீழ் உட்பட்டது.
இத்திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 செய்யலாம். இத்திட்டத்தின் அதிகபட்ச முதலீட்டு வரம்பு கிடையாது, எனவே உங்கள் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின் முதலீட்டு காலம்..1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு, 5 ஆண்டு என பல்வேறு கால அவகாசங்களுக்கு முதலீடு செய்ய முடியும். 5 ஆண்டுகள் முதல் திட்டத்தில் முதலீடு செய்தால், அது Section 80C வரிவிலக்கிற்கும் தகுதி பெறும்.
இத்திட்டத்தின் வட்டி கணக்கிடும் முறை, இந்த திட்டத்தில் வட்டி வருடாந்திர அடிப்படையில் கணக்கிடப்படும்.ஆனால், அடிப்படை வட்டி கால அவகாசத்தின் முடிவில் மட்டும் வழங்கப்படும்.
இத்திட்ட முதலீட்டின் நன்மைகளை பார்க்கலாம்,
இத்திட்டம் தபால் நிலையத்தின் கீழ் செயல்படுவதால், இது மிகவும் பாதுகாப்பாக இருக்கும். மேலும், வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், திருப்பீடு நிச்சயமாக கிடைக்கும். 5 ஆண்டு திட்டத்தில் முதலீடு செய்வதால் Section 80C உடன் வரிவிலக்கு கிடைக்கும்.தபால் நிலைய கால அவகாச டெபாசிட் திட்டம் என்பது உங்கள் பணத்தை பாதுகாப்பாகவும், வட்டியின் மூலம் அதிகப்படுத்தவும், இது ஒரு மிகச்சிறந்த வழியாகும்.