Post Office Monthly Income Scheme In Tamil - தபால் நிலையத்தில் புதிய திட்டம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.அந்த திட்டத்தின் பெயர் மாதாந்திர வருமான திட்டம் , அதாவது(MIS-Monthly Income Scheme) இதன் மூலம் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால்,மாதம் மாதம் வருமானம் பெற முடியும்.
Post Office Monthly Income Scheme In Tamil -பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் மாத வருமானம் கிடைக்க வேண்டும் என்றும் நினைக்கும் நபர்களுக்காகவே தபால் நிலையத்தில் புதிய திட்டம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.அந்த திட்டத்தின் பெயர் மாதாந்திர வருமான திட்டம் , அதாவது(MIS-Monthly Income Scheme) இதன் மூலம் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால்,மாதம் மாதம் வருமானம் பெற முடியும்.
இந்த திட்டத்தில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் மற்றும் எப்படி இதைஒ பயன்படுத்துவது?இதன் பயன்கள் என்ன என்று விரிவாக பார்ப்போம்.பலரும் சந்தையுடன் தொடர்புடைய சேமிப்பு திட்டங்கள் அதிக ரிட்டன்களை கொடுத்தாலும், குறைவான ரிட்டன்களை வழங்கும் நிலையான வருமான திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.மேலும், பெரும்பாலானோர் முதலீடுகளில் இருந்து வழக்கமான மாத வருமானம் பெறுவதற்கே விரும்புகிறார்கள்.
இவர்களுக்கு பயன்பெறும் வகையில் தபால் நிலையம் மாதாந்திர வருமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பணத்தை ஒருமுறை நீங்கள் முதலீடு செய்தால்,அதிலிருந்து மாதம் மாதம் நிலையான வருமானம் வந்து கொண்டிருக்கும். இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களை பார்ப்போம். வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4% , முதலீடு செய்யும் அளவு ரூ.1,000 முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ரூ.9 லட்சம் முதலீடுக்கு 5 ஆண்டுகளுக்கான மாத வருமானம் ரூ.5,550 முதிர்வு காலம் 5 ஆண்டுகள்.வட்டி செலுத்தப்படும் காலம் ஒவ்வொரு மாதமும் ஆகும்.
மேலும், இது தராவரிய முதலீடு ரூ.9 லட்சம்.வட்டி மூலமாக பெறும் வருமானம் ரூ.3,33,000 மற்றும் மாத வருமானம் ரூ.5,550 ஆகும்.இந்த திட்டத்தின் பயன்கள்,ஜாயிண்ட் அக்கவுண்ட் வசதி ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.மேலும்,5ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு பிறகு திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.இத்திட்டம்,உங்கள் குறைந்த வருமானத்தை மேம்படுத்த மற்றும் மாதாந்திர நிதி நிலைத்தன்மையை வழங்குவதற்கு உருவாக்கப்பட்டுள்ளது.உங்கள் அருகினில் உள்ள தபால் நிலையங்களில் இந்த வசதியைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்