• India
```

விவசாய தங்கநகைக் கடனுக்கும்..நார்மல் தங்க நகைக் கடனுக்கும்...இவ்ளோ வித்தியாசம் இருக்கா...?

Normal Gold Loan VS Agri Gold Loan

By Ramesh

Published on:  2024-12-05 01:20:30  |    545

Normal Gold Loan VS Agri Gold Loan - நார்மலான தங்கநகைக் கடனுக்கும், விவசாய தங்க நகைக் கடனுக்கும் உள்ள வித்தியாசங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Normal Gold Loan VS Agri Gold Loan - தங்கநகைக் கடன் என்பது பொதுவாக ஒரு அவசரத்திற்கு வங்கிகளில் எளிதாக கிடைக்கும் கடனாக பார்க்கப்படுகிறது, அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு, அதன் மதிப்பிற்கேற்ப ஒவ்வொரு வங்கிகளும் பணத்தை வழங்குகின்றன, தங்க நகைக் கடனுக்கான வட்டி விகிதங்களும், அதன் மதிப்பிற்கான கடன் மதிப்பும் வங்கிககளுக்கு ஏற்ப வித்தியாசப்படுகின்றன.

பொதுவாக தங்க நகைக் கடன் என்பது இரண்டு விதங்களில் வங்கிகளில் கொடுக்கப்படுகின்றன, ஒன்று சாதாரணமாக யார் வேண்டுமானாலும் அடமானம் வைத்து அதன் மதிப்பிற்கேற்ற கடனை பெற்று கொள்ளலாம், இன்னொன்று விவசாயிகளின் வசதிக்கு ஏற்ப, விவசாய கார்டுகள் மூலம், அடமானம் வைத்து அதன் மதிப்பிற்கேற்ற விவசாய தங்க நகைக் கடன் பெற்றுக் கொள்ளலாம்.



சரி விவசாய தங்க நகைக் கடனுக்கும், சாதாரண தங்க நகைக் கடனுக்கும் என்ன வித்தியாசம்?

1) பொதுவாக விவசாய கார்டுகள் மூலம் தங்க நகையை அடமானம் வைத்து கடன் கேட்பவர்களுக்கு பெரும்பாலான வங்கிகளில் செயலாக்க கட்டணம், பரீசீலனை கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை,

2) சாதாரண தங்க நகைக் கடனுக்கு வங்கிகள் 8.80% முதல் 10% வரை வட்டி விதிக்கின்றன,

3) விவசாய கார்டுகள் மூலம் வழங்கப்படும் விவசாய தங்க நகைக்கடன்களுக்கு வட்டி 7% முதல் ஆரம்பம் ஆகிறது, பாங்க் ஆப் மஹாராஸ்டிரா வங்கி விவசாய தங்க நகைக்கடனுக்கு 7% மட்டுமே வட்டி விதிக்கிறது,

4) விவசாயிகள் ஏதாவது பருவ கால சூழலால் பின் தங்கும் போது விவசாயிகள் நகைகளை வைத்து வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்ய வாய்ப்புகள் இருக்கிறது,

5) ஆனால் நார்மலாக வாங்குகின்ற தங்க நகைக் கடன்களில் தள்ளுபடிக்கு வாய்ப்புகள் இல்லை.

" பொதுவாக விவசாய தங்க நகைக் கடனுக்கு விவசாய கார்டு என்பது அவசியம், இந்த விவசாய கார்டுகளை விவசாயிகள் அவர்களது தாலுகாக்களில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் "