New Fixed Deposit Scheme With High Interest - பிரபல வங்கி ஒன்று 300 நாளுக்கு போடப்படும் பிக்சடு டெபாசிட்களுக்கு, 8.10 சதவிகிதம் வரை வாடிக்கையாளர்களுக்கு வட்டி வழங்குவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
New Fixed Deposit Scheme With High Interest -பொதுவாக வங்கிகள் வெளியிடும் நீண்ட நாள் டெபாசிட் பிளான்களை விட, ஷார்ட் டர்ம் டெபாசிட் பிளான்கள் தான் வாடிக்கையாளர்களை வெகுவாக கவருகிறது, அந்த வகையில் பல வங்கிகளும் ஷார்ட் டர்ம் டெபாசிட்களுக்கு பல அதிரடியான வட்டி வீதங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகின்றன. பதிலுக்கு TMB வங்கியும் தற்போது அந்த போட்டி களத்தில் இறங்கி இருக்கிறது.
இதற்கு முன்னதாக TMB 400 என்ற பெயரில் ஒரு பிக்சடு டெபாசிட் ஸ்கீம் ஒன்றை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி செயல்படுத்தி வந்தது, அத்திட்டத்தின் மூலம் இணையும் மூத்த குடிமக்களுக்கு, பிக்சடு டெபாசிட்களில் போடப்படும் பணத்திற்கு 8 சதவிகிதம் வரை வட்டி வழங்கி வந்தது, மூத்த குடிமக்கள் அல்லாதோருக்கு 7.5 சதவிகிதம் வரை வட்டி வழங்கி வந்தது.
இத்திட்டம் வங்கிகளிடையே போட்டிகளை உருவாக்கவே பலரும் தங்களது பிக்சடு டெபாசிட்களுக்கான வட்டி வீதத்தை உயர்த்தி கால அளவையும் குறைத்தனர், பெரும்பாலான வங்கிகள் ஒரு வருடத்திற்கே 8 சதவிகிதம் வரை வட்டி என அறிவித்ததால் TMB 400 திட்டத்தில் சேர எந்தவொரு வாடிக்கையாளர்களும் முனைப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தான் TMB புதிய FD திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
TMB 300
TMB 300 என்பது முந்நூறு நாட்கள் பிக்சடு டெபாசிட் திட்டம் ஆகும், இத்திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கு 8.10 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படுகிறது, மூத்த குடிமக்கள் அல்லாதோருக்கு 7.60 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படுகிறது, ஏனைய வங்கிகள் ஒரு வருடத்திற்கு வழங்கும் வட்டி வீதத்தை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி 300 நாட்களுக்கே வழங்குவதால் மறுபடியும் வாடிக்கையாளர்கள் பிக்சடு டெபாசிட்களுக்கு TMB வங்கியை திரும்பி பார்க்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.