Needs Scheme in Tamil-சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு 75 இலட்சம் மானியத்துடன் ஐந்து கோடி வரை கடன் வழங்கும் தமிழக அரசின் நீட்ஸ் (NEEDS) திட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் நீட்ஸ் (NEEDS) திட்டம் என்பது என்ன?
NEEDS - New Entrepreneur cum Enterprise Development Scheme, அதாவது புது தொழில் முனைவோர்களுக்கான தொழில் துவங்க உதவும் ஒரு திட்டம், இத்திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோர்களுக்கு, தமிழக அரசு 10 இலட்சம் முதல் 5 கோடி வரை, 25 சதவிகிதம் அல்லது 75 இலட்சம் மானியத்துடன் கடனுதவி வழங்கும். இத்திட்டம் 2012 முதலே இருந்தாலும் கூட தற்போது பல மாறுதல்களுடன் புதுமைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இத்திட்டத்திற்கான தகுதிகள்!
1) குறைந்த பட்சம் தொழில் முனைவோர் 12 ஆம் வகுப்பு படித்து இருக்க வேண்டும்.
2) வயது 21 முதல் 45 வரையினுள் இருக்க வேண்டும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 10 வயது தளர்வுடன் 55 வயது வரை இருக்கலாம்.
3) குறைந்த பட்சம் தமிழகத்தில் 3 வருடம் இருந்ததற்கான ஈருப்பிட சான்று அவசியம்.
4) தொழிலுக்கான நல்ல ஐடியா என்பது மிக மிக அவசியம்.
5) வருமானம் குறித்து எல்லாம் கவலைப்பட தேவையில்லை, யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தின் கீழ் சேரலாம்.
சரி, எப்படி திட்டத்திற்கு அப்ளை செய்வது?
1) https://www.msmetamilnadu.tn.gov.in/needs-tamil.php என்ற இணையதளத்தில் அப்ளை என்ற ஆப்சனுக்குள் சென்று தகவல்களை உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளலாம்.
2) தொழிலுக்கான அனைத்து ஆவணங்களும், இட ஆவணங்கள், இடத்திற்கான உரிமை, தொழில் செய்ய வாங்கப்பட்ட உரிமை சான்றிதழ் என அனைத்தும் பதிவிட வேண்டி இருக்கும்.
3) நேரடியாக உங்களது மாவட்ட தொழில் மையத்துக்கும் சென்று பதிவு செய்யலாம்.
4) இட ஆவணம், தொழில் துவங்க கொடுக்கப்பட்ட அனுமதி ஆவணம் உள்ளிட்டவைகளை கையில் எடுத்துச் செல்வது அவசியம்.
5) உங்கள் ஆவணங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், வணிக வங்கிகள், தாய்கோ வங்கிகள் மூலமாக கடனுதவி உங்களுக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தினால் என்ன பயன்?
1) 75 இலட்சம் வரை மானியம் கிடைப்பதால், அந்த மானியத்தின் மூலமாகவே ஒருவரால் தொழில் ஆரம்பிப்பதற்கான துணை பொருள்களை வாங்கி கொள்ள இயலும்.
2) வருமானம், படிப்பு, வயது உள்ளிட்டவைகளில் அரசு தளர்வு கொடுத்து இருப்பதால் இத்திட்டம் இன்னும் பல தொழில்முனைவோர்களை சென்றடைய வாய்ப்பு இருக்கிறது
3) தொழில் துவங்க வேண்டும் என ஐடியாக்களை மட்டும் வைத்து இருப்பவர்களுக்கு இது அவர்களது ஐடியாக்களை நிறுவனம் ஆக்க உதவும்.
4) சேவை மற்றும் உற்பத்தி பிரிவினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் இந்த கடன் அப்பிரிவில் பல சிறு குறு தொழில் முனைவோர்களை தொடர்ந்து உருவாக்கி கொண்டு வருகிறது.