• India
```

முத்ரா திட்டத்தில் 3 வகையான கடன்கள்..விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

Mudra Loan Details In Tamil | Mudra Loan Scheme Details

Mudra Loan Details In Tamil -2015ல் மத்திய அரசு அறிமுகப்படுத்திய முத்ரா கடன் திட்டத்தின் கீழ், தொழில் தொடங்குபவர்களுக்கு அடமானம் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற வணிகங்களை ஊக்குவிக்கக்கூடிய இந்த திட்டம், தொழில்முனைவோருக்கு கடன் பெறுவதில் தளர்வு அளிக்கிறது.

Mudra Loan Details In Tamil -2015ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முத்ரா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தொழில் தொடங்குபவர்களுக்கு அடமானம் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

தகுதியானவர்கள், சிறு வணிகத் திட்டத்துடன் இந்த கடனை பெற முடியும். முத்ரா நிறுவனம் நேரடியாக கடன் வழங்காது, ஆனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன்கள் வழங்க உதவுகிறது. சுருக்கமாக, வங்கிகள் இந்த திட்டத்தின் கீழ் தொழில்களுக்கு கடன் அளிக்க, அதற்கான நிதியைக் கொடுக்கிறது.


முத்ரா திட்டத்தின் கீழ், மூன்று வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன:

1.ஷிஷு – ரூ.50,000 வரை

2.கிஷோர் – ரூ.50,000 - ரூ.5 லட்சம் வரை

3.தருண் – ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் வரை

இவை, சிறு வணிகங்கள் தங்கள் வளர்ச்சியைத் தொடங்கவும், விரிவாக்கவும் உதவும்.  

யாரெல்லாம் முத்ரா கடன் பெறலாம்?

சிறு அளவிலான தொழில் முனைவோர், தயாரிப்பு ஆலைகள், சேவை வழங்குபவர்கள், கடைக்காரர்கள், உணவகங்கள், காய்கறி, பழவியாபாரிகள், மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் போன்ற தொழில்களுக்கு முத்ரா கடன் கிடைக்கிறது. 


முத்ரா கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், 24 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும், மற்றும் வணிகம் குறைந்தது 3 ஆண்டுகளாக இயங்கியிருக்க வேண்டும். மேலும், முந்தைய கடனை திருப்பிச் செலுத்தாத நிலைத் தடையில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.

முத்ரா கடனுக்கு விண்ணப்பம் செய்யும் முறை

1. www.udyamimitra.in என்ற வலைதளத்திற்கு சென்று, 'Apply Now' என்பதைக் கிளிக் செய்யவும்.

2. புதிய தொழில்முனைவோர், அல்லது சுயதொழில் செய்பவர் எனத் தேர்வு செய்யவும்.

3. தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, OTP மூலம் பதிவு செயல்முறையை முடிக்க வேண்டும்.