Latest FD Schemes - பொதுவாக மக்களுக்கு தற்போது Long Term டெபாசிட்களின் மீது பெரிதாக பரிட்சயம் இல்லை, 10 வருடம், 15 வருடம் என அவர்கள் பெரிதாக காத்து இருக்கவும் தயாராக இல்லை, அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் 10 சதவிகிதம் கையில் வர வேண்டும் என நினைக்கிறார்கள், அதாவது 1 இலட்சம் டெபாசிட் செய்தால் அது ஒரு வருடத்திற்குள் 1,10,000 ரூபாயாக கையில் வர வேண்டும்.
என்ன தான் பல பொதுத்துறை வங்கிகளில், பல Fixed Deposit திட்டங்கள் இருந்தாலும் கூட அவர்கள் 7% கொடுப்பதே பெரிய விடயமாக பார்க்கப்படுகிறது, ஆனால் தற்போது கனரா வங்கி பொதுத்துறை வங்கியாக இருந்தாலும் கூட தங்களது வங்கி வாடிக்கையாளர்களுக்கு 8% வரையில் வட்டி தரும் புதிய பிக்ஸடு டெபாசிட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அதாவது இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பிக்ஸடு டெபாசிட்களுக்கு 7.90 சதவிகிதம் முதல் 8 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படுகிறது, அதாவது மூத்த குடிமக்களுக்கு 8 சதவிகிதம் வட்டியும், மூத்த குடிமக்கள் அல்லோதோருக்கு 7.90 சதவிகிதம் வட்டியும் வழங்கப்படுகிறது, இந்த பிக்ஸடு டெபாசிட்டுக்கான கால அளவு என்பது 444 நாட்கள் என வங்கி நிர்ணயித்து இருக்கிறது.
இந்த கனரா 444 பிக்ஸடு டெபாசிட் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 3 கோடி வரை டெபாசிட் செய்ய முடியும், இத்திட்டத்தின் கீழ் இணைந்து சேவிங்ஸை துவங்க, கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு இருப்பது அவசியம், அது போக வங்கிக் கணக்குடன் ஆதார் மற்றும் பான் கார்டு நிச்சயம் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது கூடுதல் தகவல்.