Latest Fixed Deposit Scheme - பொதுவாகவே சேமிப்பு என்பது தற்காலங்களில் மிக மிக அவசியம் ஆன ஒன்றாக இருக்கிறது, தினம் தினம் நான் பயன்படுத்துகின்ற அனைத்துமே விலை ஏறிக் கொண்டே போகிறது, இதற்கிடையில் நிச்சயம் சேமிப்பிற்கு என்று தனியாக ஒதுக்கி வைத்தல் நிச்சயம் அவசியம் ஆகிறது, ஏதாவது ஒரு அவசர காலங்களில் அந்த சேமிப்பு என்பது நம்மையும் நம் குடும்பத்தையும் பொருளாதார வீழ்ச்சிகளுக்குள் விழாமல் காத்திடும்.
வெறும் கையில் சேமிப்பது என்பது ஆகச்சிறந்த சேமிப்பாக இருக்காது, அது செலவுகளுக்கு மட்டுமே வழி வகுக்கும், உங்களிடம் ஒரு 10 இலட்சம் ஏதோ வியாபார இலாபமாகவோ, இல்லை பென்ஷன் பணமாகவோ இருக்கிறது என்றால் அதை அப்படியே கையிலேயே வைத்து இருப்பதில் என்ன பிரஜோனம் இருக்க போகிறது, குறைந்த காலத்திற்கு நிலையான வைப்பு தொகையாக போட்டு வைக்கலாம்.
உங்கள் செலவுக்கு தேவைப்பட்டால் வட்டியை மட்டும் மாதத்திற்கு ஒருமுறையோ வருடத்திற்கு ஒருமுறையோ எடுத்துக் கொள்ளலாம். சரி நிலையான வைப்பு தொகையையும் சும்மா ஏதாவது ஒரு வங்கியில் போட கூடாது, வட்டி அதிகமாக இருக்க வேண்டும் அதே சமயத்தில் அதற்கான கால அளவும் கம்மியாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே FD என்பது இலாபம்.
அந்த வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகள் அறிமுகப்படுத்தி இருக்கும் ஒரு அட்டகாசமான FD திட்டத்தில், நிலையான வைப்புத் தொகைக்கு 8.5% வரை வட்டி வழங்கப்படுகிறது, அதாவது மூத்த குடிமக்களுக்கு 8.5% வரை வட்டியும், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 8% வட்டியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது, இந்த வைப்பு தொகைக்கான காலமும் ஒரு வருட காலம் தான் என்பது இத்திட்டத்தின் இன்னொரு சிறப்பு.
" இதற்கு முன்னதாக மத்திய கூட்டுறவு வங்கியின் அதிகபட்ச FD வட்டி வீதம் 8.25% ஆக இருந்தது, தற்போது அந்த விகிதம் 0.25% உயர்த்தப்பட்டு 8.5% ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது "