Latest FD Scheme - Fixed Deposit க்கு 9.10 சதவிகிதம் வரை வட்டி வழங்கும் வங்கி குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
பொதுவாக மக்களுக்கு தற்போது Long Term டெபாசிட்களின் மீது பெரிதாக பரிட்சயம் இல்லை, 10 வருடம், 15 வருடம் என அவர்கள் பெரிதாக காத்து இருக்கவும் தயாராக இல்லை, அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் 10 சதவிகிதம் கையில் வர வேண்டும் என நினைக்கிறார்கள், அதாவது 1 இலட்சம் டெபாசிட் செய்தால் அது ஒரு வருடத்திற்குள் 1,10,000 ரூபாயாக கையில் வர வேண்டும்.
என்ன தான் பல பொதுத்துறை வங்கிகளில், பல Fixed Deposit திட்டங்கள் இருந்தாலும் கூட அவர்கள் 7% கொடுப்பதே பெரிய விடயமாக பார்க்கப்படுகிறது, ஆனால் உட்கர்ஷ் என்ற ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஒன்று தங்களது வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 9.10% வரையில் வட்டி தரும் பிக்ஸடு டெபாசிட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
சரி இது என்ன புது வங்கியாக இருக்கிறது நம்பிக்கையாக போட முடியுமா என்றால் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வங்கி தான், உங்களது பணத்திற்கும் முதலீட்டிற்கு வட்டிக்கும் எந்தவொரு பாதுகாப்பு குறைவில் நிச்சயமாக இல்லை, சரி ஒரு வருடம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் இரண்டு வருடம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் நீங்கள் ஒரு வருடம் ஒரு தொகையைw FD யில் போட போகிறீர்கள் என்றால் பொது வாடிக்கையாளர்களுக்கு 8% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 8.60% வரையும் வட்டி கிடைக்கும்,அதுவே நீங்கல் வைப்புத்தொகையை இரண்டு வருடம் போட நினைக்கிறீர்கள் என்றால் பொது வாடிக்கையாளர்களுக்கு 8.60% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 9.10% வரையும் வட்டி கிடைக்கும்.