Interest Less Loan For Men Self Help Group - வேளாண் கூட்டுறவு வங்கி, ஆண்களுக்கான சுய உதவிக்குழுக்களுக்கு 1 இலட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்குகிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Interest Less Loan For Men Self Help Group - இத்திட்டத்தின் மூலம் ஆண்கள் ஒரு 10 பேர் கொண்ட சுய உதவிக் குழுவிற்கு வேளாண் கூட்டுறவு வங்கி ஆளுக்கு 50,000 முதல் 1,00,000 ரூபாய் வரை, மொத்தமாக 5 இலட்சம் முதல் 10 இலட்சங்கள் வரை வட்டி இல்லாக் கடனை வழங்குகிறது, இத்திட்டம் தென் தமிழகத்தில் பல வேளாண் பின்புலங்கள் கொண்ட ஆண்களால், சுய உதவிக் குழுக்கள் ஆரம்பித்து வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் இணைய என்ன செய்ய வேண்டும்?
1) முதலில் 10 பேர் கொண்ட ஆண்கள் குழுவை உருவாக்கி அதற்கு ஒரு பெயர் சூட்ட வேண்டும்.
2) பின்னர் 10 பேரும் உங்கள் ஊரில் இருக்கும் வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ 500 கட்டி ஒரு சேமிப்பு கணக்கு, பின்னர் மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரு ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும்.
3) பின்னர் குழுவின் பெயரில், வேளாண் கூட்டுறவு வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும்.
4) மொத்தம் தனித் தனியாக ஒவ்வொருவருக்கும் இரண்டு சேமிப்பு கணக்குகள் மற்றும் குழுவிற்காக ஒரு சேமிப்பு கணக்கு இவ்வளவும் செய்ய வேண்டும்.
5) குழு அமைத்து, சேமிப்பு கணக்கு எல்லாம் துவங்கிய ஒரிரு நாட்களில் உங்களுக்கு குழுவிற்கு தேவையான லோன் மதிப்பு வங்கியால் பரிசீலிக்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்
1) இந்த கடன் முழுக்க முழுக்க வேளாண் திட்டம் சார்ந்தது என்பதால், நன்செய் நிலத்தின் பட்டா மற்றும் அடங்கலின் நகல் அனைவரும் கொடுக்க வேண்டி இருக்கும்.
2) இது போக ஆதார் கார்டு, பான் கார்டு
3) ஆதாரில் முகவரி வேறுபட்டு இருக்கும் பட்சத்தில் முகவரிச்சான்றிதழும் அவசியம்.
4) இது போக முன்னதாக துவங்கப்பட்ட மூன்று சேமிப்பு கணக்குகளின் பாஸ்புக்கும் அவசியம்
விதிமுறைகள்
1) குழு ஆரம்பித்து முதல் வருடம் ஒருவருக்கு 50,000 வீதம் குழுவிற்கு 5 இலட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்குவார்கள்.
2) நீங்கள் அதை சரியாக, சரியான நேரத்தில் அடைத்து விடும் பட்சத்தில் அந்த லோன் முடிந்ததும், உங்களுக்கு ஒரு இலட்சம் சாங்சன் ஆகும்.
3) அதற்கு பின்னர் உங்கள் குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கு 1 இலட்சம் வீதம் 10 இலட்சம் வரை கடன் தொகை வழங்கப்படும்.
4) முக்கியமாக உரத்திற்கும், மத்திய கூட்டுறவு வங்கியின் பிடித்தம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையும் கடன் தொகையில் இருந்து கழித்தே உங்களுக்கு தொகை கொடுக்கப்படும்.