Full Interest Subsidy Educational Loan - பெறும் கல்விக் கடனுக்கு முழுமையான வட்டி மானியம் பெற வேண்டுமா, எப்படி கடன் எடுக்க வேண்டும், இதோ வழிகள்.
Full Interest Subsidy Educational Loan - பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு, அவர்கள் பள்ளிப் படிப்பை முடித்ததும் இலட்சங்களில் பணம் கொடுத்து கல்லூரி சேர வேண்டும் என்பது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும், இதனால் பல மாணவர்களும் பள்ளிப் படிப்போடு படிப்பை நிறுத்தி வந்தனர், இதனை கருத்தில் கொண்டு அரசு அறிமுகப்படுத்திய திட்டம் தான் வங்கிகளில் முழு வட்டி மானியத்துடன் கல்விக் கடன்.
முழு வட்டி மானியத்துடன் கல்விக் கடன் என்பது, கிட்டதட்ட ஒரு வட்டியில்லா கடன் போல தான், அதிக பட்சம் 10 இலட்சம் வரை இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம், 7.5 இலட்சம் வரை கடன் பெறுவதற்கு பிணையம் ஏதும் தேவைப்படாது, பத்து இலட்சத்திற்கு அதிகமாகவும் பெற முடியும், ஆனால் 10 இலட்சங்களுக்கு மேல் பெறும், அந்த தொகைக்கு மட்டும் வட்டி மானியம் கிடைக்காது.
படிக்கும் காலம் மற்றும் அதற்கு அடுத்து ஒரு வருடம் வரை நீங்கள் வாங்கும் கடனுக்கு வங்கிகளால் வட்டி விதிக்கப்படாது, அதாவது அந்த வட்டி அரசினால் கட்டிக் கொள்ளப்படும்,இதன் மூலம் படித்து உங்களுக்கு வேலை கிடைக்கும் வரை கடனை பற்றி கவலை கொள்ள தேவையில்லை, படித்து முடித்ததும் வேலை கிடைத்து விட்டால் அந்த ஒரு வருட அவகாசத்திற்கும் கடனை எப்படி கட்டுவது என முடிவெடுத்து விடலாம்.
இத்திட்டத்தின் கீழ் கல்விக் கடன் பெற மாணவரின் குடும்ப வருமானம் 4.5 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும், ஆதார், பான், வருமானச் சான்று, கல்லூரியின் வருடாந்திர கட்டண மதிப்பு அறிக்கை சீட்டு, 8 போட்டோக்கள், இது போக உங்கள் தகப்பனாரின் ஆதார் மற்றும் போட்டோ இவை அனைத்தும் உங்கள் கைகளில் இருக்கும் பட்சத்தில் அன்றே கூட கல்விக் கடனுக்கு பதிவு செய்ய முடியும்.