• India
```

கூட்டுறவு’ செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக்கடன்..அறிமுகமாகிய புதிய வசதி..!!

Home Loan Details | Cooperative Society Loan

Home Loan Details -தமிழக அரசு 'கூட்டுறவு' செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் மக்கள் ரூ.75 லட்சம் வரை வீட்டுக்கடனை எளிதாக பெற முடியும்.

Home Loan Details -தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களை டிஜிட்டல் மயமாக்கியுள்ள நிலையில், மக்கள் ரூ.75 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. ‘கூட்டுறவு’ செயலியின் மூலம், இனி கூட்டுறவுத்துறையின் அனைத்து சேவைகளையும் மக்கள் டிஜிட்டல் வழியில் மிகவும் எளிமையாக பயன்படுத்தலாம். 

இந்த செயலியின் மூலம், பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை கூட்டுறவு சங்கங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கொடுக்கிறது.


மேலும், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெற இணையவழியில் விண்ணப்பிக்கவும், தேவையான தகவல்களை பெறவும் ‘கூட்டுறவு’ செயலி உதவியாக இருக்கும்.


இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்களால் ‘கூட்டுறவு’ செயலி மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள்.அதன் தொடர்புடைய கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிகளுக்கு இணைய வழியில் சென்றுவிடும்.


மேலும்,பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

கூட்டுறவு செயலியின் மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.மேலும், வீட்டுக்கடனின் வட்டி விகிதம் 8.5% ஆகும்.இந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு 20 ஆண்டுகள் வரை கால அவகாசம் எடுத்துக்கொள்ள முடியும்.