• India
```

ஒரு வருடத்திற்கு...8.25 சதவிகிதம் வரை வட்டி...கூட்டுறவு வங்கிகளின் அதிரடி திட்டம்...!

Fixed Deposit In Cooperative Banks

By Ramesh

Published on:  2024-10-15 03:43:06  |    327

Fixed Deposit In Cooperative Banks - பிக்சடு டெபாசிட்டுகளுக்கு ஒரு வருடத்திற்கு 8.25 சதவிகிதம் வரை வட்டி என வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகள் ஒரு FD திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கின்றன.

Fixed Deposit In Cooperative Banks - பொதுவாகவே சேமிப்பு என்பது தற்காலங்களில் மிக மிக அவசியம் ஆன ஒன்றாக இருக்கிறது, தினம் தினம் நான் பயன்படுத்துகின்ற அனைத்துயும் விலை ஏறிக் கொண்டே போகிறது, இதற்கிடையில் நிச்சயம் சேமிப்பிற்கு என்று தனியாக ஒதுக்கி வைத்தல் நிச்சயம் அவசியம் ஆகிறது, ஏதாவது ஒரு அவசர காலங்களில் அந்த சேமிப்பு என்பது நம்மையும் நம் குடும்பத்தையும் பொருளாதார வீழ்ச்சிகளுக்குள் விழாமல் காத்திடும்.

எப்படி சேமிப்பது? 

வெறும் கையில் சேமிப்பது என்பது ஆகச்சிறந்த சேமிப்பாக இருக்காது, உங்களிடம் ஒரு 10 இலட்சம் ஏதோ வியாபார இலாபமாகவோ, இல்லை பென்ஷன் பணமாகவோ இருக்கிறது என்றால் அதை அப்படியே கையிலேயே வைத்து இருப்பதில் என்ன பிரஜோனம் இருக்க போகிறது, குறைந்த காலத்திற்கு பிக்சடு டெபாசிட்களில் போட்டு வைக்கலாம். உங்கள் செலவுக்கு தேவைப்பட்டால் வட்டியை மட்டும் மாதத்திற்கு ஒருமுறையோ வருடத்திற்கு ஒருமுறையோ எடுத்துக் கொள்ளலாம்.


சரி, எந்த வங்கியில் பிக்சடு டெபாசிட் போடலாம்?

பொதுவாக வாடிக்கையாளர்கள் தற்போது பிக்சடு டெபாசிட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர், அந்த வகையில் வங்கிகளும் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில், அதிரடியான பல பிக்சடு டெபாசிட் ஸ்கீம்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர், அந்த வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகள் இதுவரை எந்த வங்கிகளும் தராத அளவிற்கு, பிக்சடு டெபாசிட்களுக்கு, ஒரு வருடத்திற்கு 8.25 சதவிகிதம் வரை வட்டி என  மூத்த குடிமக்களுக்கும், 8 சதவிகிதம் வரை வட்டி அனைவருக்கும் என புதிய அட்டகாசமான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

" பொதுவாக ஒரு வருடத்திற்கு 8.25 சதவிகிதம் வரை வட்டி என்னும் போது இது ஒரு சிறந்த பிக்சடு டெபாசிட் திட்டமாக பார்க்கப்படுகிறது, இதே பிக்சடு டெபாசிட் திட்டத்தை ஒரு சில தனியார் வங்கிகள் 400 நாட்கள் திட்டமாக செயல்படுத்தி வருகின்றனர், ஆனால் இது இரு வருடம் மட்டும் என்னும் போது வாடிக்கையாளர்களை நன்றாகவே ஈர்க்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை "